Tuesday, May 18, 2010

மே 18..அரியணை அமைப்போம்



மே 18..

தமிழின வரலாற்றின் கருப்பு நாள்..

கருப்பு ஆடு(நாடு)களின் சதியால் தமிழினம் கவிழ்ந்த நாள்..

எத்தனை உயிர்கள் போயின...நாதியற்று போனது நம்மினம்..என்று எண்ணி எண்ணி இரங்கற்பா பாட வேண்டியதில்லை.

அடுத்தக் கட்டம் என்ன ..அதை நோக்கி எழுவோம்...இந்த நாள் தமிழின வரலாற்றின் முக்கிய மான நாள்..கண்ணீர் செறிவதை விடுத்து களம் காணும் நாள்..

ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் உணர்விருக்கட்டும்..உணர்வு உரமாகட்டும்..உயிர்த்தெளட்டும்..தலைவன் கனவு தளைத்து எழட்டும்..

இந்த நாளில் ஓர் உறுதிமொழி ஏற்போம்..எங்கே தமிழினத்தை அழித்து ஒழித்து விட்டதாய் அகம்பாவம் கொள்கிறானோ சிங்களன்..அங்கே நம் அரியணையை அமைப்போம்..

தமிழீழம் வெல்லும்

அது தமிழன் பெருமை சொல்லும்..

Widget byLabStrike


No comments:

Post a Comment