Sunday, April 25, 2010

தமிழ் அழுகிறாள்..தரங்கெட்ட தமிழர்க்கு தாயாகி விட்டோமென்று.


நானறியா காலம்

-----------------------------
என் மூதாதையர்

மொழிந்ததால்-தமிழ்

எனக்கு மொழி.

என் இனம்

பேசியதால்-இனத்தால்

நான் தமிழன்.

புத்தகங்களும்,எழுத்துக்களும்

எனக்கு போதித்தது-தமிழ்

எனக்குத் தாய்.

வள்ளுவன் எனக்கு

வழிகாட்டி.

அகர முதல என்

ஆரம்பம்.

எழுத்தாணி எம்மின

ஆயுதம்.



நானறிந்த காலம்

------------------------------

போர்ப்படை உடையில்

புலியென நடையில்

தலைவன் வந்தான்.

தமிழ் வாழ்ந்தது.

எம் தலைவன் கையில்

எழுத்தாணி கண்டேன்

துப்பாக்கி வடிவில்..

புறநானூறு தெரிந்தது.

தமிழ்மொழி தன்பெயரை

உருமாற்றி

பிரபாகரன் என

பெயர்மாற்றம் கண்டது.

தமிழ் அதனாலே-

பெருமை கொண்டது.

தமிழ்மகனை ஈன்றெடுத்த

தமிழ்த்தாய் பார்வதியை

வந்தாரை வாழ்விக்குமாமே

தமிழ்நாடு-விரட்டி

சாதனை கண்டது.

தமிழின் பெயர் சொல்லி

தரங்கெட்டு   உயிர்வாழும்

நயவஞ்சக கூட்டமெல்லாம்

தமிழ் வாழ்க!!தமிழ்வாழ்க!!

கோசம் எழுப்பி

குளிர்காய

தமிழ் தலைக்கவிழ்ந்து

அழுகிறாள்-தரங்கெட்ட தமிழர்க்கு

தாயாகி விட்டோமென்று.




Widget byLabStrike


No comments:

Post a Comment