Friday, October 18, 2013

மறக்க முடியாத பொருட்கள் - ஞாபகம் வருதே!

தினந்தோறும் எத்தனையோ மின்னஞ்சல்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பும்...

அதில் அன்பு,பாசம்,நட்பு,காதல்,நல்லது,கெட்டது மாதிரியும் பத்து பேர்க்கு அனுப்புங்க..இல்ல கஷ்டத்த அனுபவிப்பிங்க கிற மாதிரி சாமி படம் போட்ட காமெடிகளும் இருக்கும்..

அதில் சில நேரங்களில் வரும் சில மின்னஞ்சல்கள் நம் மனதை தொடும்...ரசிக்க வைக்கும்...அதன் தன்மைக்கேற்ப நம்மை ருசிக்க வைக்கும்.

அப்படி..ஓர் மின்னஞ்சல்..

நம் தினசரி இயந்திர வாழ்க்கையில் நம் எவ்வளவோ நிகழ்வுகளையும்,நினைவுகளையும் மறந்து வேகமாய் காலச்சக்கரத்தில் சுழன்றுகொண்டுள்ள நிலையில்....காலச்சக்கரத்தை கொஞ்சம் பின்னோக்கி சுழல விட்டால்....ஞாபகம் வருதே!! ஞாபகம் வருதேன்னு பாட தோன்றும் நான் ரசித்த சில ஞாபகங்கள் உங்கள் பார்வைக்கு...

பிரில் இங்க:பள்ளிப்பருவத்தில் 10 பைசாவுக்கும் 15 பைசாவுக்கும் இங்க நிரப்பிய இனிய நினைவு..இங்க பேனாவில்தான் பரீட்சை எழுத வேண்டுமென்ற பள்ளிபருவ ஆசிரியர்களின் அதட்டல் ஞாபகங்கள்..வாழைக் கறை கலந்து வெள்ளை சட்டையை நீலமாக்கிய கடைசி பரீட்சை கருப்பு வெள்ளை காலங்கள் அப்படியே நினைவில்...கலர்புல்லாக..

கேமல் கம்:மரத்து கழிவை பசையாக்கி பழக்கப் பட்ட காலத்தில்..கொஞ்சம் முன்னேறிய காலத்தில்எம் பள்ளி தலைமை ஆசிரியரின் அலுவலக மேசையில் நீங்கா இடம்பெற்ற நினைவுப் பொருள்..அப்பப்போ ஏதேனும் கிழிந்ததை ஓட்ட வாட்ச் மேனிடம் கேட்ட பொருள்.

ஹீரோ பென்:ஹீரோ பெண் வைத்திருப்பது ஹீரோவாய் தெரிந்திருக்கிறது  அன்று..அப்பாவிடம் கேட்டு  சண்டையிட்டு .... பப்ளிக் எக்சாம் பத்தாம் வகுப்பு... நல்லா எழுதனும்னு அப்பா வாங்கி கொடுத்தது நினைவுகளில்...

ரெனோல்ட்ஸ் பென்:ன்றைய தினம் அனைவர் கையிலும் புழங்கும் பெண்...அடிக்கடி காணமல் போகும் பேனா மூடி..பேனாவுக்கு முடியின்றி உபயோகித்த நினைவு,.

நடராஜ் பாக்ஸ்:ஜாமென்ட்ரி பாக்ஸ்,மறக்க இயலாத பிராண்ட்..பேப்பர் விளம்பரமும் மறக்க இயலாதவை.


ஆடியோ காசெட்:பாடிக்கொண்டிருக்கும்  போதே கட் .பின் வெட்டி ஒட்டி ,போடும் போது பாதி பாடல் இல்லாமல் முழு பாடல் கேட்ட திருப்தி..பாடல் லிஸ்ட் எழுதி ரெகார்ட் பண்ணிய காலங்கள்.ஆங்காங்கே ரெகார்டிங் சென்டர் கலை கட்டிய காலங்கள்.

இன்லான்ட் கவர்:நான் வாங்கும் போது 75 பைசா இருந்தது..காந்தி இருக்கும் இடத்தில் மயில் லோகோ இருக்கும்...உறவுகளுக்கு பாலம் வகுத்த உன்னத உறவு.பதில் கடிதம் எதிர்பார்க்கும்..உரிமையின் வடிகால்..உறவுகளின் பிணைப்பு.

போஸ்ட் கார்டு:15 பைசாவிற்கு வாங்கியது..காந்தி இருக்கும் இடத்தில் புலி லோகோ இருக்கும்...பொங்கல் வாழ்த்து,தீபாவளிக்கு, என் ஓவியத்திறமைக்கு உதவி செய்தது.

பிளாப்பி:கோப்பி பண்ணுவோம்.சிஸ்டம்ல ஓபன் ஆகாது..என்ன கொடுமை சரவணன் நு கேட்க வச்சது.சமீபத்தில் வந்து வரலாறு தெரியாமல் ஆனது.

மற்றும் சில மறக்க இயலாதவை..Widget byLabStrike


14 comments:

 1. அருமையான தொகுப்பு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மறக்க முடியாதவைகள்...

  இந்தப் பதிவு எப்படி உங்கள் தளத்தில் முதலாக வருகிறது...?

  ReplyDelete
  Replies
  1. இதற்கு முன் பதிவிட்டேன் நண்பரே..நன்றி..

   Delete
 3. வணக்கம்

  உண்மையில் மறக்க முடியாத பொருட்கள் தான்... பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அன்றைய காலகட்டத்தில் தாங்கள் உபயோகப்படுத்திய பொருட்களை தேடிப்பிடித்து பதிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
  இருந்தும் தங்களது மலரும் நினைவுகள் ரசிக்க வைத்தது.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 5. உண்மைதான்..மலர்ந்தேன் மறந்தேன் துன்பங்களை..

  ReplyDelete
 6. இளமைக்கால நட்புக்களை மட்டுமல்ல.... நட்பான பொருட்களையும் மறக்க முடியாதுதான்....
  பெண் ...என்பது பென் என வந்திருக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. மாற்றி விடுகிறேன் நன்றி..

   Delete