Saturday, April 10, 2010

கள்ள வோட்டுப் பெட்டியும்,காணாமல் போன பரீட்சை பேப்பரும்..

வாழ்க்கையின் பாதையை தீர்மானிக்கப்போகிற தேர்வு...+2 தேர்வு..

ஒரு பள்ளியில் முதலாம் தாள் கு பதிலாக இரண்டாம் தாள் தரப்பட்டதாம்..

இன்னொருப் பள்ளியில் மெட்ரிக்குலேசன் தேர்வு வினாத்தாளை ஸ்டேட் போர்டு மாணாக்கர்களுக்கு கொடுத்தார்களாம்.

இப்போது ..முசிறியில் விடைத்தாள்கள் காணாமல் போய் விட்டனவாம்..விசாரிக்கிறோம்..

விடைத்தாள்கள் கிடைக்காவிடில் மாணாக்கர்களுக்கு திரும்ப தேர்வு நடக்கும் என அரசின் அறிவிப்பு...

தேர்வு முடிந்த களிப்பில், விடுமுறையில் படிப்பின் வாசனையை கொஞ்சம் தூரம் தள்ளி ,துள்ளிய மாணாக்கர்களை திரும்ப தேர்வுக்கு அழைக்கும் போது அவன் மனநிலை என்னவாக இருக்கும்..?நன்கு படித்து தேர்வை எதிர் கொண்டோர் கூட மீண்டும் நினைவு படுத்தி எழுதும் மனநிலையில் இருப்பார்களா???மீண்டும் தேர்வு என்கிற போது அந்த மாணாக்கர்களை பயம் அல்லவே பற்றிக்கொள்ளும்.அவர்களின் எதிர்காலம் எப்படி சீரழிக்கப் படுகிறது.

யாரின் கவனக்குறைவு??

எப்படி காணாமல் போகும்??

என்ன நடந்தது அங்கே??

பிட் அடிக்க கூடாது.... பறக்கும் படை அமைக்கிறதே அரசாங்கம்..ஏன் விடைத்தாளை கொண்டு வர பாதுகாப்புப்படை இல்லை..

ஒட்டு பெட்டி...கள்ளவோட்டு பெட்டிக்கு கடும் காவல்...பாதுகாப்புக்கு பலம் வாய்ந்த படை...பரீட்சை பேப்பருக்கு???

Widget byLabStrike


3 comments:

  1. //மீண்டும் தேர்வு என்கிற போது அந்த மாணாக்கர்களை பயம் அல்லவே பற்றிக்கொள்ளும்.அவர்களின் எதிர்காலம் எப்படி சீரழிக்கப் படுகிறது.

    யாரின் கவனக்குறைவு??//

    எனெக்கன்னெவோ போலி மருந்து போல இந்த விஷயத்தில் பெரிய புள்ளி யாருடைய மகனோ அல்லது மகளோ சரியாக தேர்வெழுதாத காரணத்தினால் ஒட்டு மொத்த விடைத்தாள்களை முறைகேடாக பணபலத்தினால் பெற்றிருக்கலாம்.. என்னசெய்ய..

    ReplyDelete
  2. ஆமாம் நண்பரே..நிச்சயமாய் எவனோ ஒருவனின் சுயநலம்தான் இதற்கு காரணம்..

    ReplyDelete
  3. இது நடந்தது. நம்ம ஊருக்கு பக்கத்துலதான் நண்பா.

    மாணவர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். இன்னும் பல பள்ளிகளில் சரியான கழிவறைகூட இல்லை.

    எங்கள் ஜமிந்தார் பள்ளியில் கூட மாணவியர்களுக்கு கழிவரைகள் உள்ளன. ஆனால் தூய்மையாக இல்லை என்று குறைபாட்டுடன். மாணவர்களுக்கு அதுவும் இல்லை.

    பள்ளி விசயத்தில் யாரும் கவணம் செலுத்துவதே இல்லை. வேதனையான விசயம்.

    ReplyDelete