
- மரமேறி,காடேறி
மாடு மேய்ச்சி திரிஞ்சப்போ
அடிவயிறு ஒட்டிப்போய்
ஆறு பீசாய் வச்சிருந்தேன்.
- பட்டணத்தில் வேலப்பாத்து
பளபளத்து வரும்
அண்ணன்களின்
தளதளக்கும் உடலைப் பார்த்து
தடவிக்கிட்டேன்..
சப்பையான என்வயிறை.
- குழி விழுந்த கன்னமும்
ஒடுங்கிப்போன உடலும்
கோடு விழுந்த என் வயிறும்
குண்டாக வேணுமுன்னு
கோவில் போய்
வேண்டிகிட்டேன்.
- இப்போ...பட்டணத்து வாசியாகி
பாதிவாழ்க்கை..
எழுந்ததும் ஜாகிங்..
ஈவினிங் வாகிங்..
ரெகுலர் ஜிம்...
அல்லாடி
அலைகின்றேன்.
ஊதிப்போன என் வயிறை
ஒட்டிப்போன வயிறாக்க.
எளிமையாக அழகாக இருக்கிறது.. உங்கள் கவிதை.
ReplyDeleteஉண்மையும் கூட.. :)
நன்றி தோழி...
ReplyDelete[...] நன்றி: படைப்பாளி [...]
ReplyDeleteநன்றி நண்பரே..
ReplyDelete