மார்ச் 30 குறிப்பு:
இரவு 10.30 யின் இருட்டு முகத்தில்
நிசப்தம் கழுவி
தொலைதூர வெளிச்ச புள்ளியாய்
இருட்டை எரித்து
சேலம் எக்ஸ்பிரஸ்
ஆத்தூரை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.
எதிர்பார்த்து காத்திருந்த
கண்கள்..
வண்டியை கண்டவுடன்
எதிர்பாராது ஏறின கால்கள்
அனிச்சை செயல்.
S1 15 எனக்கான இடம்.
எனக்காக காத்துக்கிடக்கிறது
இருக்கை.
எனது சமீபத்திய ஆண்டு
பயணங்களை..அலைபேசியில்
எதாவது
குயில் கூவி ஆரம்பித்து வைக்கும்.
எனது பயண நேரங்களை
பாட்டுப் பாடி ரீங்காரமிட்டுக் கொண்டே
இருக்கும்.
இன்றைய பயணம்..
குயில் கூவல் குறைவுதான்..
என் குயில்களுக்கு திருமணம் ஆகி இருந்தது
அதுவும் காரணம்..இடையிடையே
அலைத்தடை வேறு.
அப்போவும் உரிமையான ஓர் குயில் மட்டும்
பாடல் இசைந்தது.
வாடைகாற்று இல்லை..
ஆனால்..பழைய காதல் வலி
வாட்டிக் கொண்டிருந்தது.
நெடுந்தூரப் பயணத்தில்
நிலவென்னை காதலிப்பதாய் சொன்னாள்..
வலிக்கு மருந்திட்டாள்..
வழியெங்கும் உடன் வந்திட்டாள்..
ஜன்னலோர இருக்கைக்கு..ஒளிவீசி
சமிக்ஞை செய்துகொண்டிருந்தாள்
-நிலாப்பெண்.
அடுத்த காதல் ஆரம்பம்..மண்ணிலில்லை
விண்ணில்..
இயற்கை மீது எனக்குள்ள மோகம்
தீராத காதல்.
நிலாப்பெண்
விடைபெறும் போது
விடிய ஆரம்பித்திருந்தது.
தகவல் பலகை
தாம்பரம் வந்துவிட்டதாய் தகவல்
சொல்கிறது..
இயந்திர வாழ்க்கைக்கு இறங்கி ஓடுகிறேன்..
மீண்டும் ஊருக்கு வரும் போது
உன்னை சந்திக்கிறேன்..ஜன்னலோர இருக்கையில்
உனக்காய் உயிர்த்திருப்பேன்..
அடுத்தப் பயணம்
அதுவரை காத்திரு..
சந்திக்கிறேன் நிலவே!!
விடைபெறுகிறோம் இருவரும்..
Good one friend !!
ReplyDeleteEthanai kuyilgal?
ReplyDeletethank you friend.
ReplyDeleteசில காக்கைகளும் குயிலாகி இருக்கின்றன...காதலால்..ஹ..ஹா
ReplyDelete