
- என் கண்ணும் உன் விழியும்
ஒன்றாய் நோக்கும் போது
கயல்விழி மூடிடாமல்
இமைத்துடிப்பை மிச்சம் வைக்கிறாய்.
- தினம் உனைப் பார்த்தப் போதும்
முதல் முறை நோக்கும் போது
தலைக் கவிழ்ந்து நீயும்
நாணத்தை மிச்சம் வைக்கிறாய்.
- நாம் ஊடல் கொள்ளும்
போதெல்லாம்
பேசாமல் மௌனமாய்
வார்த்தைகளை மிச்சம் வைக்கிறாய்.
- உன் இதழ் பதித்து
நானிட்ட முத்தங்களில்
என் இதழோரம் கொஞ்சம்
உன் எச்சிலை மிச்சம் வைக்கிறாய்.
- என் இடைவரை படர்ந்திட்ட
உன் விரல்களை
இன்னும் கொஞ்சம் இறக்கிடாமல்
அங்கேயும் மிச்சம் வைக்கிறாய்.
- இறுக உன் கைப்பற்றி
அருகில் நான் நடக்கும் போதும்
யாரும் பார்த்திடப் போறாங்கன்னு
இடைவெளியை கொஞ்சம் மிச்சம் வைக்கிறாய்.
- உன் அன்பிலும்,அரவணைப்பிலும்
கள்ளம் கபடமில்லா காதலிலும்
மட்டும்-நீ மிச்சம் வைப்பதே இல்லை
உன்னை...
i don't know how u can write like this man....................................... wat a man....................... miccham edhaium vaikkavillai nee un yezhuthil................................
ReplyDeleteநன்றி தோழி..உன் அன்பில்..நீ மிச்சம் வைப்பதே இல்லை..
ReplyDeleteHmmmm yaruku sondham indha kavidhai
ReplyDeleteமிச்சம் வைக்காதவளுக்கு !!!ஹி..ஹேஏஏ..
ReplyDelete