Wednesday, March 24, 2010

ஐ பி எல் மேட்ச்..ஆல் அவுட் ஸ்டூடண்ட்ஸ்

ஐ பி எல் மேட்ச்...எக்ஸாம் சமயத்தில் மாணவர்களை பற்றியிருக்கும் மிகப்பெரிய பீவர்.
மட்டையையும்,பந்தையும் பார்த்துவிட்டு அவசரத்தில் பேனாவையும்,தேர்வு என்னையும் மறக்கும் அபாயம்.
இந்திய பிரதமர் யார் என்ற வினாவுக்கு...டெண்டுல்கர் என பதில் எழுதும் அடுத்த தலைமுறையின் பேராபத்து..

இந்தியாவில் அனைத்து மாணவனும் 100 கு 100 மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் பரிட்சையில் கிரிக்கெட் பற்றிய கேள்விகள் இருந்தால் போதும்..இந்தியாநிச்சயம் ஒளிரும்.அவ்வளவு கிரிக்கெட் ஆதிக்கம்.
ஐ பி எல் மேட்ச் ஆல் திரைக்கு படம்பார்க்க வருவோர் எண்ணிக்கை குறைந்தது.திரைப்பட விநியோகஸ்தர்கள் கவலை..இந்த செய்தியை தவிர எந்த பெற்றோரும் கவலையடைந்ததாக செய்திகள் இல்லை.
எங்கே செல்கிறோம் நாம்?
எதற்க்காக கவலையடைகிறோம்?டெண்டுல்கர் 98 ரன் அடித்து அவுட் ஆகி விட்டாரே...ஐயோ வடை போச்சே என்றா?..அன்றைய சோற்றுக்கு வழியில்லாத நிலையிலும்.
நாளைய பரிட்சையில் தன மகன்,மகள் என்ன மதிப்பெண் எடுப்பார்கள்..அவர்கள் படிப்பதக்கான சூழல் இருக்கிறதா?இந்த எக்ஸாம் சமயத்தில் இந்த ஐ பி எல் மேட்ச் தேவைதானா?என்று எப்போதாவது யோசிக்கிறோமா?
தோனியையும்,டெண்டுல்கரையும் துரத்தி திரிகிறோம்..அவர்களுக்காய் பிரார்த்திக்கிறோம்..பெட்டிங் செய்கிறோம்..
ஈழத்தமிழர் பிரச்சினையின் போது..ஆமா..அவங்க நாட்டு பிரச்சினைக்கு இங்குள்ள தமிழன் ஏன் போராட்டம் பண்றான் என கேட்ட அறிவுஜீவி தமிழன் கூட ....வெளிநாட்டு கிரிக்கெட்காரனின் வாயில் நுழையாத பேரை சுலபமாய் உச்சரிக்கிறான்.
தமிழ்நாட்டிர்க்காய்  விளையாடும் வெளிநாட்டுக்காரனுக்காய் இவன் அந்நியன் ஆகிறான்.கேட்டா சூப்பர் கிங்க்ஸ் கிறான்.
எங்கே போகிறது சமுதாயம்..என்ன ஆக்க போகிறோம் அடுத்த தலைமுறையை?
பரவா இல்லை..நம் மூளை மழுங்கடித்து ஐ பி எல் மடியை நிரப்புவோம்.பையன் பெயில் ஆனா  என்ன அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்..ஐ பி எல் மேட்ச் போனா அடுத்த வருஷம் பார்க்க முடியுமா??வாழ்க சமுதாயம்!!
'விளையாடு..ஐ பி எல் விளையாடு..
பசங்களின் பரீட்சை பேப்பரில்'.


Widget byLabStrike


No comments:

Post a Comment