Monday, March 22, 2010

ஊடல்



  • ஹலோ..ஹ..லவ்..


இதய அழைப்பில்

இன்முகத்தின்

இனிய குரலில்

நலம் விசாரிப்பு ,

நம்மில் எப்போதும்

நடைமுறைப்படுகிறது.

  • மெதுவாய் ஆரம்பித்த


பேச்சை

பொதுவாய் ஏதேனும் பேசி

உன் புன்முறுவல்

உடைக்கிறேன் நான்.

  • பொய்க்கோபம் கொண்டு


உன்னை திட்டி

மகிழ்கிறேன்.

நீ..மெய்கோபம்

கொண்டு மௌன விரதமிருக்கிறாய்.

  • பேசடி செல்லம்


என்று கெஞ்சல்

விடுக்கிறேன்.

மௌனத்தின் மொழியாய்

கண்ணீர் பேசுகிறாய்.

  • கண்ணீர் களைய


இச்-சொன்று கொடுக்கிறேன்.

நச்-சென்று முடிகிறது

நம் ஊடல்..கூடலில்..

Widget byLabStrike


2 comments: