Wednesday, March 10, 2010

ஒரு சொட்டு கண்ணீர்-நேற்றைய மாலைக்குறிப்பு இன்றைய காலைக்குறிப்பு..

ஆபீஸ் முடிந்து நண்பர் கார்த்தியுடன் பைக்கில் சென்றுகொண்டிருக்கிறேன்.சாம்பல் கலருக்கும் சற்று அடர்த்தியான நிறத்தில் ஓர் honda activa எங்கள் வண்டியை குறுக்கிட்டு முந்தி செல்கிறது.

எப்போதும் figure களை நோக்கும் என் கண்கள் அந்த honda activa வின் பின்புறம் அமர்ந்து செல்லும் பெண்ணை பின்தொடர்கிறது.

அழகு தேவதை..சற்று குண்டு...சற்று குள்ளம்..இருந்தாலும் தேவதை.

இருள்போர்க்கும் இந்த மாலை 6.30 மணிக்கும் குளிர் கண்ணாடி அணிந்திருக்கிறாள்.

எங்கள் வண்டியும் அந்த வண்டியை நெருங்கவே திரும்பி பார்க்கிறேன்.

அடடா..என்னவள் மாதிரியே இருக்கிறாளே !ஒருவேளை என்னவள்தானோ?

அவளும் என்னைப் பார்த்துவிட்டாளோ புரியவில்லை..குளிர் கண்ணாடியை கழற்றி தன்னை யாரென்று என்னிடம் காட்ட எத்தனித்தாளோ தெரியவில்லை..

அவளேதான்..என்னவளேதான் என்கிறது மனம்.100 கு 100%அவளாகத்தானிருக்கும்.

அப்போ...வண்டி ஓட்டுபவர் அவள் கணவராகத்தான் இருக்கும்.

எங்கள் வண்டியை முந்திக்கொண்டு வேகமாய் செல்கிறது அந்த வண்டி.

எப்படியாவது எங்கள் வண்டி அந்த வண்டியை குறுக்கிடும் என எதிர்ப் பார்க்கிறேன்.

எங்களை கடந்து எங்கோ செல்கிறது அந்த வண்டி.

என் கண்கள் செறிந்த ஒரு சொட்டு கண்ணீர் அவள் காதலின் நினைவாய் மண்ணிலே விழுகிறது..

அவளாக இருந்திருந்தால்..அவளின் ஒரு சொட்டு கண்ணீரும் நனைத்திருக்கும் இம்மண்ணை...எழுதி முடிக்கிறேன் நேற்றைய மாலை..குறிப்பை..

அவசரமாய் அதிகாலை நேரத்தில் அவளிடமிருந்து அழைப்பு..நேற்று மாலை உன்னை பார்த்தது நான்தான்..விண்ணை தாண்டி வருவாயா..படம் பார்த்துவிட்டு வந்தோம் நானும்,என் கணவரும்....நம் காதல்கதை தான்..உன் நினைவுகள்தான்..எப்படியாவது நீ கண்ணில் படுவாய் என்று எண்ணினேன் பார்த்து விட்டேன் என்றாள்..நம் காதலுக்காய் ஒரு சொட்டு கண்ணீர் இல்லடா..கண்ணீர் வற்றும் அளவுக்கு அழுவேன்..அழுதேன்..அழுவது தெரியாதிருக்கவே அணிந்திருந்தேன் கண்ணாடியைஎன்றாள்...என் காதல் குறிப்பு..இன்றைய காலை குறிப்பாய்..

Widget byLabStrike


No comments:

Post a Comment