Saturday, March 6, 2010

முதல் காதல்

  • நீயும் நானும்

நானும் நீயும்

அருகருகில் -இருந்திட்ட

அக்காலக் கணங்களை

எக்காலம் நோக்கினும்

ஈடேற்ற இயலாது அன்பே!

  • காலங்கள் கடக்கலாம்

இளமைமாறி முதுமை

எய்தலாம்.

இன்னொருத்தி எனக்கு

வாழ்க்கைத் துணையாகலாம்.

என் வசந்த காலத்தை

உன்னிடம் மட்டுமே

ஒப்படைத்து விட்டேனடி உயிரே!

  • எங்கோ கடந்திட்ட காற்று

நீயிட்ட முத்தங்களின்

ஈரம் இன்னும்

காயாமல் உள்ளதாய்

ஓயாமல் என்னிடம்

சொல்லிச்செல்கிறதடி கண்ணே!

  • எப்போதோ சந்தித்த

இடங்களும்..

நாம் எப்போதும் சந்திக்கும்

இடங்களும்..

உன்னவள் நலமா?

என என்னிடம்

உரக்க கேட்டுக்கொண்டே

உள்ளதடி பெண்ணே!

  • நாம் மிதித்து வைத்த

மண்ணின் மணத்தில்

நம் காதல் வாசம்

இன்னும் இருக்கிறது.

உன் காதலி எங்கே?

நான் தனித்திருக்கும் போது

தவறாமல்

காலம் கேட்க்கிறதடி முத்தே!

  • உன் விரல் பட்ட

என் தேகம்

என் விரல் பட்டால் கூட

தன்னை விடுவித்துக் கொண்டு

என்னைக் கேட்க்கிறது..

முதல் ஸ்பரிசம்

தந்தாளே அவளை வரச்சொல்

தொட்டு விட்டுப் போகட்டும்

என்னை என்று..அமுதே!

  • இவைக் கெல்லாம் நான்

என் சொல்வேன்?

என்னவள் எங்கோ

இன்னொருவன் மனைவியாகி விட்டாள்

என்றா?

  • என் முதல் காதலே!!

நாளை

நீ வரும் போதும்

நிச்சயம் கேட்கும்.. இவையெல்லாம்..

உன்னவனை மறந்திட்டாயா என்று?

பதில் சொல்லக் காத்திரு..

பாவிப் பயல..என்னாலும்

இன்னும் மறக்க இயலவில்லையென்று!



Widget byLabStrike


4 comments:

  1. பாவி பயல உன்னால மறக்க முடியலையா> அற்புதம் கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி சரவணன்.

    ReplyDelete