Thursday, March 4, 2010

கதவை மூடு...காமம் வரட்டும்.நித்யா நந்தா...இன்றைய தினம் மீடியாக்களை ஆக்ரமித்த காவிக் காமக் கலைஞர்.

விடாது கருப்பாய் நம்மை வீடியோ தேட வைத்த அடுத்த காவி வித்தகர்..வீடியோவில் மாஸ்க் செய்யப்பட்ட முகம் யாரென பட்டிமன்றம் நடத்த பயன்பட்டவர்.இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இந்த காவி மனிதர்களின் அக்கிரமங்களை..

இது ஒரு புறம் இருக்க தீர்த்தம் என்ற பெயரில் போதைக்கு அடிமையாக்கும் அடுத்த பகவன் அந்தப்புரம்..

சாமியார் போர்வையில் எவ்வளவு சல்லாபங்கள்..காவி போர்வையில் எவ்வளவு களிப்பு..என கிளர்ச்சியுறம் இம்மனிதர்களை கடவுளாய் நம்பும் கூட்டம் மாறவா போகிறது..

அடுத்த காவியை தேடும்..அவனை கடவுலாக்கும்..களிப்புறும்..பின் அவன் லீலை தெரியும் போது பக்தகோடி ஆத்திர மடையும்..கல்வீசும்..பேனர் கிழிக்கும்.

இந்த ஆனந்தாக்கள் வரிசையில் எத்தைனையோ ஆனந்தாக்ளும்,பகவான்களும் படைஎடுத்திருக்கிறார்கள்..படையெடுக்க காத்திருக்கிறார்கள்...பக்தகோடிகளை நம்பி..பக்தர்களே தயாராய் இருங்கள்..அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க..காசு கொடுத்து ஆசிரமம் வளர்க்க...

பின் ஒரு நாள் காவி காம களியாட்டம் வரும்..அன்று கல் எறியவும் உங்களை தயார்ப் படுத்தி கொள்ளுங்கள்..

Widget byLabStrike


10 comments:

 1. மக்கள் திருந்த போவதில்லை உம வேலையை பார் அய்யா

  ReplyDelete
 2. நித்யானந்தர் குறை கூற யாருக்கும் அருகதையில்லை. ஏனெனில் இயேசு கூறியது போல - உங்களில் தவறு இழைக்காதவன் முதல் கல் எறியட்டும்! காவி ஆடை - அதனை அணிந்து அதன் 'புனிதத்தை' களங்கப்படுத்தியமைக்கு கண்டனம் செய்யலாம். மற்றது அந்த மனிதனின் சுய வாழ்வு! தன் வாழ்முறையை பிரதானப்படுத்தி முன்னேறவில்லை. அந்த எடிர்பார்ப்பை மக்கள்தாம் அந்த மனிதன் மேல் திணித்தனர்! அது அந்த மக்களின் தவறே அன்றி இந்த காவி மனிதனின் தவறு கிடையாது. இந்த மனிதனின் தனி மனித சுதந்திரத்தில் விளையாடும் சில கட்சிகளும், விளம்பரம் நாடும் சில நாளேடுகளும் செய்யும் அசிங்கமான செயலிது! இதே போன்ற காட்சி பல பல வீடுகளில் நிதமும் நடக்கிறது. அது கணவன் மனைவியாகவோ, காதலன் காதலியாகவோ இருக்கலாம். அதனை படமெடுத்தால் அது வரம்பு மீறிய செயல் - அடிப்படை சுதந்திரத்தை பாதிக்கும் செயல். இந்திய தண்டனை சட்டப்படி ஆசனவாய் புணர்வு ஒருக குற்றம். அது நடக்கிறதுன்று எந்த படுக்கை அறையிலும் நுழைய யாருக்கும் அதிகாரமில்லை. அதுப் போன்றுதான் இதுவும்.

  I am not a disciple or a fan. But the media onslaught and the self-proclaimed but hypocritical self-righteous persons like you, VHF, Nakeeran, SUN TV just do not understand what fundamental rights are. They were consenting adults. There was no crime. There was no assault. Actually, the video which is a invasion of one's privacy is a crime and that is punishable by law.

  Does this act or will it validate some one stepping into MK / MK's sons/ JJ / Sonia / ManMohan Singh or for that matter anyone's bedroom and slap a video recording device. Hey if that 80 yr old man can get an erection that would be worth a news too - probably a medical miracle.

  Like Tiwary this guy did not abuse his office. Nor did he seduce this actresses. If money exchanged as in Kanchi priest then it could be a criminal behaviour under SITA act. But that too is not evident [and the exchange has to happen in open].

  Where is India heading with such hypocrtical blogging - towards the middle ages?

  ReplyDelete
 3. நித்தியானந்தா என்ற சராசரி மனிதன் ,ரஞ்சிதாவுடன் படுக்கையை பகிர்ந்திருந்தால் நான் தவறென்று கூறியிருக்க மாட்டேன்...தன்னை பிரமச்சாரி என்றும்,தன சீடர்கள் தாம்பத்திய வாழ்கையில் ஈடுபடக்கூடாது என்றும் சொன்ன போலியின் முகத்திரை கிழிந்ததையும்,காவிகளை நம்பும் மக்கள் விழிக்கவே எழுதியுள்ளேன்.

  ReplyDelete
 4. பிரம்மச்சரியம் உயர்ந்த ஒன்றுதான்,. ஆனால் இப்போது நி்த்தியாநந்தாக்களினாலும் சில காம பாதிரியார்களினாலும் அது கேள்வி்க்குறியாக நிற்கிறது.

  சிறுவர் சிறுமியர்களை வன்புணர்வு செய்தவர்களைவிட ஒரு நடிகை மேல் மக்களுக்கு அதிக மோகம்@.்ு
  - ஜெகதீஸ்வரன்
  http://sagotharan.wordpress.com/

  ReplyDelete
 5. ஆமாம்...ரஞ்சிதாவுக்கு இப்போதான் ரசிகர் மன்றங்கள் அதிகமாகும் போலிருக்கிறது நண்பா..

  ReplyDelete
 6. நித்யானந்தர் ஒரு இந்து மத குரு. மக்களுக்கு நல்வழி காட்டுவதாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர். இப்படிப்பட்ட ஒருவர் இந்த தவறை செய்யலாமா? என்பதே பொது மக்களின் கேள்வி! மக்களின் கருத்து மிகவும் சரி. ஆனால் மிக அவசியமாக அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. நித்யானந்தர் - ரஞ்சிதா வீடியோ ஒரு உடலுறவு காட்சி இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவுக்கு தயாராகும் அந்த உணர்ச்சிமிக்க நேரத்தில் தங்கள் பாலுணர்வை ஆன்மீக உணர்வாக மாற்றுகிற ஒரு தியான நுட்பம். அங்கு ( வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு) நாம் நினைக்கிற மாதிரி எல்லா ஆபாசங்களுக்கும் இடம் உண்டு. நித்யானந்தருக்கு உணர்வு நிலை நிச்சயமாக அப்படியிருக்காது என்பது அவரது சீடர்களின் எண்ணம். சரி அந்த தியான நுட்பம் தெரிந்தவரா ரஞ்சிதா? சரி விடுங்கள் , இதுவல்ல விஷயம். இந்த தாந்த்ரீக முறை பல காலமாக நமது இந்தியாவில் இந்து மதத்தினரால் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. நமது இந்து மத சாமியார்கள் தாங்கள் ஞானமடைந்த பிறகு இந்த மாதிரி முயற்சியெல்லாம் செய்வது சகஜமான ஒன்றுதான். ( லார்டு கிருஸ்ணா வாழ்ந்த காலத்தில் வீடியோ இல்லை, மீடியா இல்லை.) இப்போதும் வட இந்தியாவில் இப்படி நடந்து வருவதாக சிலர் சொல்கிறார்கள். மொத்த கொள்ளளவான இந்து மதத்தைப்பற்றி ஒருவருமே வாயை திறக்கவில்லை. ஏன்? ஏன்? ஏன்? இந்து மதத்தை தொட முடியாது. அது புனிதமானது. அப்படியா? அட..... போங்கப்பா! நீங்களே அதைதான் நம்பி ஓட்டிக்கிட்டு இருக்கிறீர்கள் வாழ்க்கையை .

  ReplyDelete
 7. என்ன செய்ய நண்பரே..அரசியலை ஆரம்பித்து வைப்பவனும் காவி...ஆட்சியை கவிழ்ப் பவனும் காவி..சாமி போர்வையில் தானே எல்லா சல்லாப நாய்களும் திரிகின்றன இந்நாட்டில்....காவி நாட்டில் நம் ஆவி போக கத்தினாலும் வேலைக்காகாது போகிறது..

  ReplyDelete
 8. மனித குல வரலாற்றில் காணும்போது இதுவரை நடந்து வந்துள்ள அனைத்து போர்களுக்கும், , அனைத்து தனிமனித அடக்கு முறைகளுக்கும் , அனைத்து பொருளாதார அடக்கு முறைகளுக்கும் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது மதங்களும், கடவுளர்களுமே.ஆனாலும் அனைத்து மதங்களும் பொய்யானதே, அனைத்து கடவுளர்களும் பொய்யானவர்களே.ஒரு இயற்பியலுக்கு நிரூபணம் எல்லா நாட்டிலும் ஒன்றுதான், ஒரு கணிதவியலுக்கு நிரூபணம் எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும் ஒன்றுதான், ஏன்? எல்லா இயலுக்குமே அனைத்துலகிலுமே ஒரே மாதிரிதான். இந்த ஆன்மீக இயலுக்கு மட்டும் ஏகப்பட்ட ஏகப்பட்ட நிரூபணங்கள். இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது? ஒரு மனித உயிர், எந்த கால கட்டமாக இருந்தாலும் சரி, எந்த இனத்தவராக இருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையை சேர்ந்தவராக இருந்தாலும் சரி இந்த ஞான நிலையை அடைவது என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி நிகழ்வுதான். புத்தருக்கும், ஏசு பிரானுக்கும், மகாவீரருக்கும், கிருஷ்ணாவுக்கும், நபிகள் நாயகத்துக்கும், சிவனுக்கும் அனைவருக்குமே ஒரே மாதிரிதான். அனாலும் இந்தனை மதங்கள் எப்படி தோன்றியது? ஏன்? இத்தனை கோடி உயிர்கள் பலியாக வேண்டும்? யாரை திருப்தி படுத்த இத்தனை வன்முறைகள்?

  ReplyDelete
 9. அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் அருமையான அறிவுபூர்வமான கேள்விகள்..யோசித்துப் பார்த்தால் உங்கள் கேள்வியின் ஆழம் தெரிகிறது..ஆமாம் கடவுளுக்கும்,மதத்துக்கும் மட்டும் எப்படி இத்தனை பிரிவுகள்.?????.பணம் பண்ண,மானுட ஒற்றுமையை உடைக்க, மனிதனை அறிவிலியாக்க ஏறப்படுத்தப்பட்டது தானே மதம்.

  ReplyDelete