
- கோலம் போடத் தெரியாதாமே
உனக்கு..
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
காலிலே கோலம் போட
கற்று தந்ததோ காதல்.!
- உன் பட்டப்பெயர்
ஆல் இந்தியா ரேடியோவாமே!!
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
உன்னை
ஊமையாக்கியதோ உன் நாணம்.!
- மருதாணி போட்டால் கூட
சிவக்காத கைகளாமே உனக்கு.
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
வெட்கத்தில்
சிவந்ததோ உன் கன்னம்.!
- வெளியுலகம் அறியாதவளாமே
நீ..
என்னைப் பார்த்த மாத்திரத்தில்
எப்படி அறிந்தாய்
என் உள் இதயம்.!
- இன்று ஒரு நாள்
காதலர் தினமாமே!!
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
உறுதிப் படுத்திக்கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினமே!!

Parthu romba kolam potu kuli agi nilathula erunthu thanni vanthara poguthu soli vainga:-)
ReplyDeleteகாய்ந்த பாலை கூட
ReplyDeleteஅவள் கால் பட்டால்
நீர் ஊற்றெடுக்கும் தோழி.ஹி..ஹி..