Sunday, February 14, 2010

ஒவ்வொரு நாளும் காதலர் தினமே!!



  • கோலம் போடத் தெரியாதாமே


உனக்கு..

என்னைப் பார்த்த மாத்திரத்தில்

காலிலே கோலம் போட

கற்று தந்ததோ காதல்.!

  • உன் பட்டப்பெயர்


ஆல் இந்தியா ரேடியோவாமே!!

என்னைப் பார்த்த மாத்திரத்தில்

உன்னை

ஊமையாக்கியதோ உன் நாணம்.!

  • மருதாணி போட்டால் கூட


சிவக்காத கைகளாமே உனக்கு.

என்னைப் பார்த்த மாத்திரத்தில்

வெட்கத்தில்

சிவந்ததோ உன் கன்னம்.!

  • வெளியுலகம் அறியாதவளாமே


நீ..

என்னைப் பார்த்த மாத்திரத்தில்

எப்படி அறிந்தாய்

என் உள் இதயம்.!

  • இன்று ஒரு நாள்


காதலர் தினமாமே!!

உன்னைப் பார்த்த மாத்திரத்தில்

உறுதிப் படுத்திக்கொண்டேன்.

ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினமே!!

நன்றி: யூத்புல் விகடன் குட் ப்ளாக்கில்  தேர்வு செய்தமைக்கு.

Widget byLabStrike


2 comments:

  1. Parthu romba kolam potu kuli agi nilathula erunthu thanni vanthara poguthu soli vainga:-)

    ReplyDelete
  2. காய்ந்த பாலை கூட
    அவள் கால் பட்டால்
    நீர் ஊற்றெடுக்கும் தோழி.ஹி..ஹி..

    ReplyDelete