Saturday, February 27, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா..உதட்டை நோக்கி!!


முழுக்க முழுக்க காதலன்,காதலியை மையப்படுத்திய காதல் கதை.கௌதம் மேனன் தன் காதலிக்கு போட்டுக் காட்ட வேண்டிய ,படத்தை காதலை தமிழ் மக்கள் எல்லோரிடமும் பகிர்ந்திருக்கிறார்...காதலின் வலி,வலிமை இரண்டும் நன்றாய் தெரிகிறது...உணர்வை உலுக்குகிறது..நம்முள்ளும் ஊடுருவுகிறது.

இஞ்சினியரிங் முடித்து வேலையில்லாமல் அலையும் இளைஞனுக்கு சினிமா இயக்குனர் ஆசை.தான் காதலிக்கும் பெண்ணுக்கோ இளைஞனை விடவும் வயது அதிகம் + சினிமாவே பார்க்காத தீவிர கிருத்துவ குடும்பம்,அதனால் எதிர்ப்பு..

மேற்கண்ட காரணங்களை சொல்லி காதலை மறுக்கும் பெண்ணை கதாநாயகன் எப்படி இம்ப்ரெஸ் செய்து காதலுக்கு ஓகே செய்கிறார் என்பது கதை..ஓகே பண்ண அவர் அடிக்கடி கிஸ் அடிக்க வேண்டி உள்ளது..விண்ணைத்தாண்டி வருவாயா...கொஞ்சம் இயக்குனர் உதட்டை தாண்டி யோசித்திருக்கலாம்...ஹ..ஹா..

அமெரிக்க மாப்பிள்ளை,கதாநாயகி திருமணத்தை நிறுத்துவது,வழக்கமான கதை நடை.

கதாநாயகனின் இயக்குனர் ஆசை,கதாநாயகனுக்கும்,கதாநாயகிக்கும் திருமணம் நடந்ததா என்பது கிளைமாக்ஸ்..

கதையில் இளமை தெரிகிறது..த்ரிஷா முகத்தில் இல்லை.வார்த்தைக்கு வார்த்தை கார்த்திக் என்ற பெயரும்,ஜெஸ்ஸி என்ற பெயரும் நம் காதுகளை குடைந்து கொண்டே இருக்கிறது...காதலை அவ்வளவு தடவி இருக்க வேண்டிய அவசியம் இல்லை..கதாநாயகன்,நாயகி,கேமரா மேன் என்று மூன்று பாத்திரங்களையே படம் சுற்றி வருவது நிறையவே நம்மை அலுக்க வைக்கிறது..படம் நீண்ட நேரம் இழுப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது..

கேமரா அழகு சேர்க்கிறது..இசை ஒரு பலம்..பாடலுக்கான காட்சி அமைப்புகள் ஒரே தாக்கத்தை உண்டு செய்கிறது..வெளிநாட்டு காரர்கள் எல்லா பாடல்களுக்கும் வந்து ஆடி விட்டு ஓடி விடுகிறார்கள்.

கதாநாயகன்,கதாநாயகி,காதலை சுற்றியே அனைத்து காட்சிகளும் காப்பி பேஸ்ட்  டையலாக்குகள்,வராமல் செய்திருந்தால் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.

பாடும் ராகம்!!பார்க்கலாம் ரகம்!!

Widget byLabStrike


9 comments:

  1. Vaara idhazhil vaara vaaram thirai vimarsanam padipadhu vazhakam. indha vaaram maraga padaipaliyil padithuvitean... paratugal. koodavea 1.super 2.ok 3.waste endra comment um searthu irukalam- ipadiku vasagar voice

    ReplyDelete
  2. பிரியமான வாசகியே!!நன்றி.......

    ReplyDelete
  3. நன்றி கூறியதற்கு நன்றி

    ReplyDelete
  4. kamal padam onnu kudava ungaluku nyabagan varala?
    gandhi ah pathi sollum podhu kuda hey ram la avaru ena panaru?
    kalai ku mozhi kidayathu nu solluvanga, cinema la yenna tamilan malayali nu piruchu pakuringa?

    ReplyDelete
  5. gandhi freedom kaga poradavadu seinjaru,
    ellarayum vimarsanam panradhu nala neenga nalla padaipali aiduvingala? peru sollara mari our padaipa kuduthutu apuram padaipali nu peru veinga

    ReplyDelete
  6. thanakku thanmel mudhalil thannambikkai vendum..padaikka padaikkave padaippu merugerum..

    ReplyDelete