Friday, January 22, 2010

என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – IV

• இவன் மழலைப் பருவத்தில்

எல்லோரும் கார் பொம்மை தேடுகையில்

எனக்கு எப்போதும் கலர் பொம்மை

அமைப்பு அட்ராக்ஷன் வேணும்..

கோலியும் கில்லியும அனைவர்

கையென்றால்..கரிக்கட்டையும்,

கிறுக்கல்களும் எனது கைங்கர்யம்.

• இப்படியே வார்க்கப்பட்ட

எந்நாட்கள.; அந்நாட்களில்..

ஓவியப்போட்டியில் ஒவ்வோர்

முறையும் பெற்ற பரிசு ருசி,

கலைஞனாகவே எனை ரசிக்க துவங்கியது.

• சிறுமூளை பெருமூளை

ஊன், உடல் உணர்வென பின்னாளில்

பிண்ணிப்போனது ஓவியம்.

படிப்பில் மிடில்கிளாஸ் ஆவ்ரேஜ்

மார்க்கில் அவுட் ஆகாமல்

தப்பிப்பவன்.

ஆனால் ஓவியத்தில்.O GRADE

இப்படியான பள்ளி பருவங்கள்..

ஓடி ஓடி ஓவியம் தேடி

நாடி நாடி நயம்பட தீட்டி கூட்டி

கூட்டி சேகரித்து அகம் மகிழ்ந்து

நகர்ந்த அந்நாட்கள்.

• படம் வரைந்து பாகம்

குறிக்க சொன்ன பாடங்களெல்லாம்

மற்ற மாணவர்க்கு வெறுப்பு..

எனக்கோ விருப்பு..

• இப்படியான எனது நாட்களெல்லாம்

பிள்ளையாரையும், பெருமாளையும்

தேடி, தேடி வரையும்.

• விஷ்னுக்குத்தான் தசவதாரமா?

பிள்ளையாருக்கு?

நூறவதாரம் என்னால்...

ரஜினி ஸ்டைல்... பேண்டு சட்டை

அம்மணமாய்,

அழகாய், கருப்பாய், வெளுப்பாய்

காந்திய ரீதியில் கோவணமாய்..

பாஞ்சாலியை துகிலுறித்த துரியோதனனைப்போல்

மயிலுக்கு போர்வையளித்த பேகனைப்போல.;

வள்ளலாய்..வில்லனாய்..

பிள்ளையார் என்னால் பிரச்சினைக்

குள்ளானார்.

பின்னாளில் தெரிந்தது

பிள்ளையார் என்னால் மடடுமல்ல.

எல்லோராலும் கருச்சிதைந்திருக்கிறார்..

இல்லை உரு.

மாற்றி வரைவதற்கு ஏற்ற உருவமாய் அவதரிப்பதும்

அதற்கு

காரணம்.

கார்ட்டூன் கேரக்டரைப்போல்... அவரிருப்பதும்

அதற்கு துணை.

• அப்போதெல்லாம்

தின இதழ்களிலும், வார இதழிழும்

சிறுகதைகளுக்கு வரும் ஓவியங்களே

எனக்கு வரப்பிரசாதம்.

இலவச இதழ்கள் (சிறுவர்மலர், தினமலர்)

இவனுக்கு தீனி.

• மைக்கேல் ஆஞ்சலோவும்,

லியானர்டோவும் இவன் அறிவு அறியா

காலம்..

இவன் மதிக்கு தெரிந்தது மாருதியும்,

மா.செ வும் மட்டுமே.

இதுதான் ஓவியம் என

எனக்கு நானே வட்டமிட்டு வலம்

வந்த வயது.

• நன்றாக நினைவிருக்கிறது

பத்தாம் வகுப்பு முடிக்கிறேன்.

என்ன படிக்கலாம்.. எங்கு படிக்கலாம..;

தினமணியின் மணியான வெளியீடு.

வருங்கால வாழ்க்கை வரவேற்பிற்காய் புத்தகம்

புரட்டுகையில்..

கும்பகோணம் கலைத்தொழில் கல்லூரி

கண்ணில் படுகிறது.

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் 5 ஆண்டுகள்..

காதலில்தான் மனதில் பட்டாம்பூச்சி

படபடக்கும் என்பார்கள்...

அது பொய்..

எனக்கு படபடத்ததே அப்போ!

தினசரி பழக்கம் குறைவெனினும்

கல்லூரி விளம்பரம் தேடி தினசரி பழக்கமாய் தினசரி

படிப்பு.

அப்புறம் ஆய்ந்ததில்..

விளம்பரம் வந்து வெகுநாட்கள்

ஆகி.. வேறொருவர் மூலம் விபரம் வர..

கடைசி நாளாய்.. கல்லூரி சென்று

விண்ணப்பம் நிரப்பிய நாட்கள்

ஆஹா... நானறிந்த எம் ஊரில்

நான்தான் அப்போ நன்கறிந்த

ஓவியன்.. நமக்கா சீட் கிடைக்காது

என்கிற மிதப்பு.

நுழைவுத்தேர்வெழுதி நொண்டி,

நொண்டி ஓடிய நாட்கள்.

ரிசல்ட் இன்று நாளையென்று எண்ணி எண்ணி ஓட்டி..

ஓட்டி..

ஓய்ந்த காலம்.

சீட் கிடைக்கவில்லை என்பதை

சிந்தைக்கு சொல்லிற்று.

அப்போதான் ஓவியனாய்

நான் கொண்ட அகந்தை அடங்கிற்று.

ஓ.. நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

இன்னும் இருக்கு.

தேடு வலைவீசு.. இது எனது மனம்.

சரி கல்லூரி கிடைக்குமென

நம்பி.. தேய்ந்து ஓய்ந்த

கடைசித்தருணத்தில்..

இந்த ஆண்டு கேள்விக்குறியா?

என்பதுபோல் 11 ஆம் வகுப்பு.

• தேடிப்பிடித்து ஆசான் ஒருவர் தயவில்

தலைவாசல் பள்ளியில்

தொழிற்கல்வி பிரிவில் எனக்கு இடம்.

அப்போ அறிந்தது பிளஸ் டூ படி

பின்பு சிங்கார சென்னையில்

ஓர் சீர்மிகு கல்லூரியாம்..

கலைத்தொழில் கல்லூரி

உண்டென்று கவனப்பட்டவன் சொல்லிட

ஆர்வம் அதிகமானேன்.

ஈராண்டு எப்போ ஓடுமென்று

ஓட்டி, ஓட்டிய பள்ளிநாட்கள்

நான் படித்தது POULTRY SCIENCE

என்பதால்

கோழி வரைவதே குணமானது.

ஓவியமே எனக்கு என்றானது.

வாவ் +2 முடிந்தது..

(வானவில் வளரும்...)

நன்றி: யூத்புல் விகடன் குட் ப்ளாக்சில் தேர்வு செய்தமைக்கு.

Widget byLabStrike


1 comment:

  1. என்ன அருமையான மொழி நடை. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete