Saturday, January 30, 2010

தியாக தீபம்



முத்துக்குமரன்..இந்த தியாக தீபம் எரிந்து இன்றோடு ஓர் ஆண்டு நிறைவுறுகிறது..இந்த செய்தி கேள்விப்பட்டவுடன்,அவன் எழுதிய அந்த கடைசி கடிதம் தான் நினைவில் நிழலாடுகிறது..

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

-என தொடங்கி தன் உணர்வு வலியினை,வார்த்தைகளாக்கி,வரலாறாகி தீபமானவன்.முத்துகுமரா நீ சாமானியன் அல்லன்..சரித்திர புருஷன்..தன்னை எரித்து தமிழனை தலை நிமிர செய்ய, நீ  கொண்ட தாகம் தான் என்னே!!தன் இன்னுயிர் பாராது ஈந்த ஈகை..உன் தியாகம் என் சொல்ல!!

தூங்கி கிடந்த தமிழனின் துயில் களையவே தீயிட்டான் தன்மேலே..எத்தனை பேர் துயில் களைந்தோம்..அல்லது அவன் தியாகத்தையாவது நினைந்தோம்.இந்நினைவெழுச்சி நாளிலாவது அவனது உணர்வு ஒவ்வொரு  தமிழனுள்ளும் பரவட்டும்..முடிந்தால் தமிழ் தெய்வத்திற்க்காய் ஓர் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி அஞ்சலி செய்வோமாக!!

Widget byLabStrike


No comments:

Post a Comment