Thursday, December 17, 2009

என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – III

• சிற்ப தேடல்:

மழைக்கால மணலில் வீடுகட்டி

மகிழ்ச்சியில் நனைந்தஅக்கால ;நினைவுகளில்தான் -

இவனின் சிற்பி பயணம் சீர்பட்டிருக்கும்.

• களிமண் பொம்மை செய்து கண்களுக்காய்

குண்டுமணி செருகிய அந்நாட்களில்தான்

இவனின் நவீன ஓவியம் (modern art)

நயம் பட்டிருக்க வேண்டும்.

• ஆனால்..

என் தாத்தாவோ நானறிந்த modern art

தந்தையாவார்.

• விளைச்சலுக்காய் பயிர் விதைக்க நெல் நாற்று

விடும்;போது-சாணிப்பிள்ளையார்

பிடித்து அருகம்புல் செறுகி நவீன ஓவியத்தை

நயம்பட செதுக்கியவர்

இப்படியே இவனது கலைப் பயணம்…

பின்னாளில்தான்…

பேப்பர் கப்பல் எனக்கு அறிமுகம்.

• பெரும்பாலோர்க்கு… கப்பல்தான் கற்றலின்

முதல் முயற்சி…

• தண்ணீரில் கல்லெறிந்து தவளை விடுவதாக

illusion பார்த்த அனுபவம்.

• அப்பப்பா..

கள்ளிச்செடியின் கல்வெட்டுகள்…

பலரின் காதல்கதையை சுமந்திருக்கும்

கள்ளிச்செடியின் முள் கீறி

கல்வெட்டு செய்திருப்பர்.

ஆனால்…

எனது கள்ளிமரம் மட்டும்

ஓவிய மொழி சொல்லும்

கிடைத்ததை எடுத்துக்கொள்

என்றாரே பிக்காஸோ அதைப்போல..

• கள்ளியும், சல்லியும், மரமும்,

செடியும் கூட எனக்கு மகத்தான

கலைச்சேவை செய்தது அப்போ…

கள்ளிப்பழம் சாப்பிட்டு நாக்கில்

கலர் காட்டுவதில் அலாதி ஆனந்தம்..

நன்கு சிவந்திருப்பது உமதா?

எமதா?

என்று போட்டியில் நாக்கை

canvas ஆக்கிய modern art

காலங்கள்…

தரையமர்ந்து படித்து படித்து…

நாற்காலியில் அமர்வதற்காய்

நகர்ந்தகாலம்…

நினைவிருக்கிறது..

• 9ம் வகுப்பு…

நான் நாற்காலியமர்ந்து சிம்மாசனம்

பிடித்தகாலம்…பின்வரிசை மாணவனாகவே

நான்…

என் இடம்… இது உன் இடம்

என மனை பிரித்த மனது..

பற்றாக்குறைக்கு பட்டா போடுவதாய்

நாற்காலியில் முன் பெயர் பொறித்த

மூதாதையின் பெயரழித்து எங்கள்

பெயர் நாற்காலி மேசையில் பொறி;க்கையில்

ஏதோ…

கல்வெட்டு பொறிக்கிறோம்… காலம்

சொல்லும் என்பது போன்ற பூரிப்பு..

அப்போவும்… அனைவரும் பெயர்

பொறிக்கையில்…நான் மட்டும்

பெயரோடு… ஓவியமும்…

இப்பொழுது அறிகிறேன்…நாம்

எப்பொழுதோ…engraving செய்திருக்கிறோமென்று.

albert durer ஐ அறிகையில்…

பச்சைமரக்கிளையில் பக்குவமாய் செதுக்கிய

கல்வெட்டுகள்..

எல்லோரும் காதல் சுவடெழுத

அங்கும் கிறுக்கல்தான் எனது

சமர்பபணம்…

மரம் நினைத்திருக்கலாம்…

காதலுக்கு இடம் கொடுத்த எனைக்

கருக்கொலை செய்கிறானென்று..

எங்கள் ஊரில்…

• ஓட்டுக் கணக்கெடுப்பில் எக்கட்சிக்கு

எவ்வளவு வாக்கு என்பது

தெரியுமோ… தெரியாதோ..

மாட்டுக்கணக்கெடுப்பில் தெரியும்.

• பொன்வண்டுகள் தேடிப்பிடித்து

நிறம் பார்த்த போதும்

• வெள்ளைக் காக்கை பறக்குதுபார்

என கை சுற்றிய போதும்

• வகுப்பறை கரும்பலகைக்கு

கோவைக்காய், கரிக்கட்டையின்

கூட்டணியில் இயற்கை வண்ண

தயாரிப்பிலும்…

-அறிந்தோ, அறியாமலோ

ஆதிக்க நிலையில் வண்ணங்களே

வந்திருக்கின்றன.

• சோலைக்கொல்லை பொம்மைக்காய்

வைக்கோல் செறுகி, மண்சட்டி

மகுடம் கவிழ்த்து சுண்ணாம்பு

பூசி, கரிக்கட்டையால் வரைவோமே!

• இறகு தெறித்த பறவைகளின்

சிறகு பொறுக்கி… சேகரித்து

ரசித்து… ருசித்த ருசிகர

நினைவுகள்…

• அந்த ஜன்னலோர பயணத்தில்

மரங்களின் பின்வரிசை வேகத்தில்

தெளிவில்லாத திட்டு திட்டான

நிறப்பிரிகைகளில்…

அப்பாடா… இதுதான abstraction

எனும்போது.. வருமே.. சுகம்..சுகம்…

• பனியில் தெரியும் நிறப்பிரிகை

நீரில் மிதக்கும் குமிழிகள்…

• காற்று சுழற்சியில் விழும் இலைகள்…

இவைகளும் இவன் கவித்துவத்தை

மேம்படுத்தியிருக்கும்…

ஒரு கலைஞனின் ஆரம்பபள்ளியில்

இவைகள்தான் ஆசானாக இருந்திருக்கக்கூடும்…

• உருவாகும் ஒவ்வோர் மனிதனும்

கற்பனைத்திறத்தோடே பிறக்கிறான்.

• அவனுள், ஆட்க்கொண்டிருக்கும்

ஆளுமைத்திறன் எதை நோக்கி

பயணப்படுகிறதோ அதை நோக்கியே

அவன் பயணம் அமைகிறது.

கலைஞனாக, கவிஞனாக, படைப்பாளியாக

இயக்குனராக உருவாகிறான்.

அப்படி என்னுள் இயல்பாய்

இருந்த அவன்

இவனுள் நிச்சயமாய் ரத்த

ஓட்டத்தோடு, ரசனையோட்டமும்

ஓடியிருக்கும்.

(வண்ணக் கனாக்கள் வரும்…)

Widget byLabStrike


No comments:

Post a Comment