Saturday, December 26, 2009

அலையாத்தியின் அறிக்கை



ஒவ்வோர் ஆண்டும்
இரங்கற்பா எழுதி விட்டு
அப்புறம் மறந்து போகாதேடா மானுடா!!

ஆறறிவுடன் ஓர் நிமிடம்
எம் அறிக்கையை
ஆராய்ந்திட்டு போ!!

சுனாமி வந்த தென்று
அறைகூவல் விடுத்தாயே.
இச்சுனாமிநாளிலாவது..சுனாமி தடுக்க ஓர் சூளுரை எடு.

எமை இனவிருத்தி செய்.கடற்க்கரையோரம் காடுகள் வளர்.
அலையாத்தி அரண் அமை.
காவலனாய் நான் நின்று உம்மை காத்துக்கொள்கிறேன்!!

Widget byLabStrike


No comments:

Post a Comment