Saturday, December 5, 2009

காஞ்சி காம கேடிகள்.. காவி காம லீலைகள்..

பிரேமானந்தா,காஞ்சி மடாதிபதியில் ஆரம்பித்து,காவிகளும்,காமகோடிகளும் காம லீலை,கொலை,கொள்ளை கொடூரங்களை நிகழ்த்தி  கொண்டு தான் இருக்கிறார்கள்..இப்போ காம அபிசேகம் கருவறையிலேயே நடத்தி கைதாகி இருக்கும் தேவநாதன் வரை...காமம் கடவுள் கொடுத்த வரம்.கருவறையில் சல்லாபித்தால் சுபிட்சம் வரும் என்கிறானாம் மன்மத லீலை தேவநாதன்.(கோவில் தீர்த்தத்தை எடுத்து வாயிலும்,தலையிலும் தெளித்து கொள்கிறோம்.இவன்க அதில் என்ன கலந்திருப்பான்களோ.நினைத்தாலே குமட்டுகிறது)..

நமக்கும் வாரம் தவறாமல் எதாவது ஒரு வார பத்திரிகையில்  அட்டைப்பட செய்தியாக எதாவது ஒரு காவி..இல்லை அர்ச்சகர் காமகளியாட்ட கதைகள்  கிடைத்த வண்ணமாகத்தான் இருக்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் தொடர்கதையாகி விட்டது..கதை ஆரம்பத்தில் ,கைது வரை நமக்கு தெரியும்..அப்புறம் திடீரென முடியும் சீரியல் போல கைது படலம் பாதி விசாரணையிலேயே விடுதலையில் முடிந்திருக்கும்.
அதற்கு பின் வெள்ளை நூலின்(பூணூல்)வீரியம் இருக்கும்.

ஒருமுறை பிரேமானந்தா கூட ஒரு பேட்டியில் கூறி இருப்பதாக என் நண்பர் சொல்ல கேள்விபட்டேன்..நான் செய்த தவறுக்கு இன்னும் ஜெயில்..ஏன் காஞ்சி மடாதிபதியை மட்டும் விட்டீர்கள்..அவர் பிராமணன் என்பதாலா என்று..நமக்கும் கூட அப்படிதான் தோன்றுகிறது..சட்டம் ஒரு பக்கமாய் வெள்ளை நூலால் கட்டபட்டிருக்கிறதோ என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்..இந்த பாழாய்ப்போன மனிதர்களுக்கு காலம்காலமாய் இந்த சாமியார் பயல்களின் சரித்திரம் தெரிந்தாலும்..சாமியார் என்று ஒரு தெருநாய் வந்தால் அவனுக்கு பின்னாலே  கூட்டம் கூட காத்திருகிறார்கள்..அவன் வரலாறு தெரியாமல்,வால் பிடிக்கிறார்கள்.

குடிகார புருசனுக்கு புத்தி புகட்ட வேண்டி சாமியார் தேடி,அவர்களின் புத்தியை இழந்துவிடுகிறார்கள் பல  பெண்கள்..பின் செருப்பும்,துடைப்பமும் தூக்கி என்ன பயன்.?
கிட்டதட்ட பலகாலமாகவே சாமியார்,பூசாரிகள் மக்களின் இயலாமையையும்,மன வேதனையையும் வைத்து ,பணம் பண்ணவும்,லீலைகளை அரங்கேற்றியும் வந்திருக்கிறார்கள் என்பதற்கு..பராசக்திபட  வசனமே அடையாளம்..

கோயில் கயவர்களின்  கூடாரமாகிவிட்டது..
கடுவுளின் பெயரால் காலட்சேபை நடத்தும்..என்ற வசனம் எவ்வளவு பிரசித்தி..
இதையெல்லாம் கண்டுமா காவியையும்,சாமியார் பயல்களையும் நம்பி ஏமாறுகிறீர்கள்.கல்லை கடவுளாக நம்புங்கள் பரவாஇல்லை..அதைவிட்டு காவிக்களை, காம கோடிகளை நம்பும் நிலை நீடித்தால்..காம " கோடிகள் " எண்ணிக்கை மில்லியன் ஆகும்..பின் பில்லியன்,ட்ரில்லியன் ஆகும்.நம்பியவன் வாழ்க்கை பாலாய்ப்போகும்.


Widget byLabStrike


6 comments:

 1. உங்களுடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். கோவில்களும் மடங்களும் இப்படி மோசமாக நாமும் ஒரு காரணம். கடவுள் பெயரால் தவறுகள் நடப்பது தெரிந்தால் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கும் ஊரின் நடுவில் வைத்து மக்களாகிய நாம் தண்டனை கொடு்க்க வேண்டும். அப்போது தான் இந்த மாதிரி கிளம்பும் கழிசடைகளை திருந்துவார்கள்.

  நமசிவாய.

  ReplyDelete
 2. ஏன் எப்போதும் இந்து மதத்தை பற்றியே குறை சொல்றீங்க ...
  பிற மதங்களில் குறைகளே இல்லையா ?
  மூடநம்பிக்கை பற்றி பேசினாலும் இந்து மதத்தில் உள்ளதை பற்றி மட்டும் தன பேசுறீங்க ?
  விமர்சிப்பவனுக்கு தைரியம் வேண்டும் ... தைரியம் இருந்தால் பிற மதத்தை பற்றி எழுதுங்கள் பார்க்கலாம்?

  ReplyDelete
 3. ஒரு பாதரியார் தன் பள்ளிய்ல் படித்த மாணவிகளை கற்பழித்து கொன்ற கதை உங்களுக்கு நினைவில்லையா ?

  ReplyDelete
 4. இந்து மதம்,கிருத்துவம்,முஸ்லிம் என்று வேறுபாடு பார்த்து நான் எழுதுவதுமில்லை.. மதத்தை மையப்படுத்தி இக்கட்டுரையை நான் எழுதவுமில்லை....மதம்பிடித்த,காம வெறிப்பிடித்த,ஏமாற்றுக்கார நாய் எங்கிருந்தாலும்,எப்படி இருந்தாலும் களையப்பட வேண்டியவனே...
  சமீபத்தில் அறியப்பட்டது அதை பற்றி எழுதி இருக்கிறேன்..குற்றவாளி எம்மதம் ஆயினும் எழுதுகின்ற தைரியம் எனக்கு இருக்கிறது..

  ReplyDelete
 5. குற்றவாளி எம்மதம் ஆயினும் விமர்சியுங்கள்...விமர்சனத்திற்கு மதச்சாயம் பூசாதீர்கள்.நான் மதத்தை விட..மதம்பிடித்தவனுக்குஎதிரானவன்...
  மதம் மானுடன் வகுத்தது...அந்த மதம் இப்போ, மானுடனை பகுக்கிறது...
  பிரிவினைக்கான மதத்தை ,ஏன் பிரியமுடன் கட்டிக்கொள்கிறீர்கள்..
  உடைத்தெறியுங்கள்..உருவாகும் நல்லதோர் சமுதாயம்.

  ReplyDelete
 6. நிச்சயமாய் நண்பரே!!

  ReplyDelete