Tuesday, December 29, 2009

ஆண் அழகாகும் தருணம்

மச்சி ஒரு குட் நியூஸ்...

என்னை எப்போதும் அழைக்கும் செல்ல மொழியால் சிணுங்கினாள்

என்னடி?

நான் தாய்மை அடைந்தேன்...

வாவ் கன்க்ராட்ஸ்!

என் கணவனுக்கு தெரியும்..தாய்வீட்டிற்கு தெரியும்..

அடுத்ததாய்..

எனது காதல்கால வரலாற்றின் தலைவனே உனக்கே சொல்கிறேன்.உரிமையோடு..என்றாள்.

ஹூம்..அப்போ..இனி என்னை மறந்திடுவாய் என்கிறேன்.

இல்லைடா பன்னி...திருமணமாகி மறவாதவள்..தாய்மையடைவதால் மறவேனா?

மரணம் வந்த போதும் உமை மறவாது என் நெஞ்சம்..அறிவுகெட்ட கழுதை.அகிம்சை மொழியால் மீண்டும் ஒருமுறை அர்சிக்கிறாள் என்னை.

இப்படிதான் அப்பப்போ பன்னி,கழுதை என எனை அழைத்து என்னை கௌரவப்படுதுவாள்.பன்னியை அசிங்கப்படுத்துவாள்.

ஐந்தறிவு ஜீவியால் ஆறறிவான ஆண் அழகாகும் தருணம்,காதலி வாயால் இப்படி கருணை மொழி கேட்கின்ற நேரம்தான்.

சொல்லடி செல்லம்..இது என்குரல்.(நானும் பதிலுக்கு அவளை நாய் என அழைத்து ,அவளை அழகாக்க விரும்பவில்லை.)

ஓர் நாளில் ,ஓர் நிமிடமாவது,எப்படியாவது, உன்னோடு உரையாடி விடுகிறேன்..

ஏன் என்று கேள்..அறிவு விளம்ப செவி மடுத்து கேள்..என்கிறாள் .

ம்...சொல்..என மண்டை ஆட்டுகிறேன் நான்.

இக்கருவுற்ற சமயத்தில்..நல்ல புத்தகங்களை நேசி...நல் கருத்துகளை வாசி...அறிவுபூர்வமான சிந்தனைகளை யாசி...அது உன்னில் வளரும் கருவை செம்மையாக்கும்..அதுகேட்டு கரு அறிவுறும்..ஆளுமை பெறும்...அலெக்சான்டர் தாய்பற்றி அறிந்திருக்கிறாய் தானே நீ?பக்த பிரகலாதன் படம் பார்த்ததில்லையோ நீ? என்று தன் தாய் தன்னிடம் சொன்னதாக என்னிடம் சொன்னாள் அவள்.

என்னை காதலித்த அளவிற்கு ஆளுமை உள்ளவனல்லவா நீ..அதுதான்,உன் அறிவும் கொஞ்சம் ஒட்டி கொள்ளட்டும் என் கருவிற்கு..
அதனால் தானடா உன்னிடம் பேசிக்கொள்கிறேன்.வஞ்சையாய் சிரித்தாள்.ஹ.ஹா

என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது..

உணவுக்காக கழிவை சாப்பிட்டு பொதுஇடத்தை சுத்தம் செய்கிறதே பன்னி.அதைப்போல..உன்னையும் காதலித்த அளவுக்கு கருணை உள்ளவள் நான் என சொல்லி சிரிக்கிறாள்..

ஓவர் குசும்புடி உனக்கு..சொல்லி வழிகிறேன் நான்..

மீண்டும் சொல்கிறாள்...போடா பன்னி..

மீண்டும் அழகாய் தெரிகிறேன்
நான்.

Widget byLabStrike


No comments:

Post a Comment