
என்னடி,உன் புன்னகையைப் பார்த்து
எல்லோரும் பூரிக்கிறார்கள்.
என்னவளின் தெற்று பல்
சிரிப்புப் பற்றி உனக்குத் தெரியுமா?
புருவமற்ற புன்னகையே!
என்னவளின் வில் பேசும்
விழியழகில் சேரன் கொடி
சிறைப்பட்டதை அறிவாயோ?
ஆராய்ச்சியில் அகப்பட்டவளா நீ!
அழுகிறாய்,சிரிக்கிறாய் என
அத்தனை வதந்திகள்..பொய்கள்.
ஆனாலும் என்னவளிடம் ஈடுசெய்யாது உன் புகழ்!!
மோனோலிசாவை பார்த்த போதெல்லாம்
முறைத்திருக்கிறேன்.
என்னவளிடம் இல்லா அழகு..
அப்படி என்ன இருக்கிறது
உன்னிடத்தில்..உலகப் புகழுக்கு என்று!
சரி டாவின்சியின் காதல்
பிழைத்துப்போகட்டும்,என்றுதான்
என்னவள் படத்தை உன்னருகில்
மாட்டாமலிருக்கிறேன்.
xelent
ReplyDelete