Saturday, December 19, 2009

அம்மணமாய்,நானலைந்த அறியா வயதில்

சொல்லப்போனால் நேற்றைய குறிப்பு..நாங்கள் கதை பேசி முடிக்கும் நேரம் காலதாமதமாகி அதிகாலை மணி இரண்டை தொட்டதால் இன்றைய குறிப்பு...

நேற்றைய இரவும் வழக்கம் போல,சாப்பிட்டு முடித்து அறை நண்பர் வேலு என் தம்பி ஜெய் மற்றும் நான்-அரட்டை கச்சேரி ஆரம்பமானது..ஜெய்,வேல் உறங்கிவிட...நானும் நண்பர் ராகுல் சேர்ந்து கொண்டதால் அசைபோடும் கச்சேரி யானது.

ராகுல்...நான் நண்பனாய் ஏற்றாலும்,கல்லூரி காலம் முதல்,அண்ணா என எனை அழைத்து என் தம்பியாகவே அறிமுகம் ஆனவன். தற்போது சூரிய நகரம் படத்தின் கலை இயக்குனர்.

பட நிகழ்வுகளைப்பற்றி பேசிவிட்டு,நிஜவாழ்க்கை நிகழ்வு நீட்சிகளை அசைபோட்டோம்.

ஆஹா..சொல்ல வைத்து அவனது அசைபோடல்கள்..திரைப்படங்களை விஞ்சிய வாழ்க்கையின் வடிவங்கள்..

நான் படித்தது முதல் இன்றைய பயணம் வரை எல்லாமே பல போராட்டங்களின் பரிணாமம் தான் அண்ணா..நான் படித்ததே ஓர் படம்தான்..என காட்சிகள் விரித்தான்.நெகிந்துபோனேன்.

அம்மணமாய்,நானலைந்த அறியா வயதில்,இலவச சட்டை,டவுசர்க்காய் பள்ளிக்கு இழுத்து செல்லப்பட்டவன்.அந்த இலவச சட்டை,டவுசர் தான் இன்றைய எனது பேண்ட்டு சட்டையின் முகவரி என்றான்.

பள்ளிக்கு கட் அடித்து ஆற்றில் விழுந்த நாட்களில்..என் மாடு மேய்க்கும் அண்ணன்..நாந்தான் மாடுமேயக்கிறேன்..நீயுமா ?எனக்கேட்டு கொடுத்த சாட்டையடி தான் என் போதிமரத்து ஞானோதயம் என்றான்.

என் காதல் ஏற்காத காதலிக்காய்,ஓர் ஓவியனான நான் ஊர் முழுக்க பேர் எழுதினேன்..அவள் பெயரெழுதி arts என்று, என்றான் தம்பி ராகுல்...

பம்புசெட்டு படுகைகளில் எங்கள் குளிகைகளை எண்ணி எண்ணி சிலாகித்தோம்.

தெருவோர திரைகட்டலில்,நேரம்பார்த்து ஓரம் ஒதுங்கும் காதல் ஜோடிகள் ,பக்கத்து வீட்டு டிவி ஞாயிற்று கிழமை நாழிகைகள்,ஒளியும்,ஒலியும்-என எனக்கு விலாசம் தந்தன நிறைய என்றான்.அவன் சினிமாவுக்கான படிக்கற்கள் எங்கிருந்து பயணமாயின..என்பதில் ஆரம்பித்து ஏனைய நிகழ்வுகள்...அலாதி..ஆனந்தம்.

அவனது வேப்பூர்,பாசார் குக்கிராம நினைவுகளில் மூழ்கிய மனம் வெளியே வர மணி அதிகாலை இரண்டு..

நன்றி: யூத்புல் விகடன் குட் ப்ளாக்சில் தேர்வு செய்தமைக்கு.


Widget byLabStrike


No comments:

Post a Comment