
எங்கே போனது..?
ஓட்டையில் ஒட்டுப்போட்ட
என் தபால் பெட்டி ட்ரவுசர்
களங்கமில்லா காலங்கள்.
எப்படி வந்தது!
மின்னஞ்சல் வாழ்க்கையில்
மிச்சமாய் சொச்சமிருக்கிறது
கபடமாய் ஓர் காய்நகர்த்தல் வாழ்க்கை.
எங்கே போனது..?
கருங்கல்லை காயமாக்கிய
என் வெறுங்கால்
காலங்கள்.
எப்படி வந்தது!
reebok,nike என
வாக்கப்பட்ட வாழ்க்கையில்
வலைப்பின்னலாய் மனதுக்குள் ரணங்கள்.
எங்கே போனது..?
நான் ஆற்றுமணலில்
குழிபறித்து ஊற்றுத்தண்ணீர்
குடித்த காலங்கள்.
எப்படி வந்தது!
மினரல் வாட்டர்
குடிக்கப்பழகி
ஈரம் காய்ந்த உள்ளம்.
எங்கே போனது..?
இடறுகின்ற கால் பார்த்து
ஓடோடி தாங்கி
மனிதம் காத்த காலங்கள்.
எப்படி வந்தது!
விபத்தில் விழுந்தவனையும்
வெற்று காகிதமாய் பார்க்கும்
மக்கி போன மனது.
எங்கே போனது..?
பஸ்சுக்கு பணமில்லாத போதும்
பிச்சைக்காரனுக்காய்,சில்லரை
துலாவிய காலங்கள்.
எப்படி வந்தது!
பிட்சா கார்னரில் சாப்பிட்டு
வரும்போதும்
ஏழை குழந்தை மீது எரிந்து விழும் மனது.
எங்கே போனது..?
அடித்த வெயிலில்
கருத்த தேகத்தில்
வெளுத்த மனது காலங்கள்.
எப்படி வந்தது!
AC குளிரில்
வெளுத்த தேகத்தில்
கறுத்த மனது.
எங்கே போனது..?
நான் ஆக்சிஜன்
சுவாசித்த அழகிய கிராமம்
இளம்வயது காலங்கள்.
எப்படி வந்தது!
காலச்சக்கரத்தில்
கார்பன் நகரத்தின்
கணினி அடிமை வாழ்க்கை.
இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்“ மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.நீங்கள் கண்டிப்பாக வெளியீட்டு விழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன். உங்கள் வருகையை எதிர்பார்க்கும் அடலேறு
ReplyDeleteநிச்சயம் வருகிறேன் நண்பரே
ReplyDelete