15.12.09 இன்றைய குறிப்பு....
எனக்கு பதினோராம் வகுப்பு படிக்கும்,தோழி ஒருத்தி உண்டு..உயிரானவள் என்பதை விட என்மேல் உணர்வானவள் எனலாம்.
இன்று அவளோடு உரையாடிக்கொண்டிருக்கும் போது,பாஸ் ஒரு மேட்டர் தெரியுமா?இன்னைக்கு எக்சாம்ல எஸ்ஸே எழுத சொன்னாங்க..தலைப்பு உனக்கு பிடிச்ச லீடர்?நான் யார எழுதிருப்பேன் ,சொல்லுங்க என்றாள்..சற்று முழித்தேன்..
தலைவர் பிரபாகரன் பத்தி எழுதினேன் பாஸ் என்றாளே..அப்போதான் நான் விழித்தேன்.இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் .ஏன் அவளை உணர்வானவள் என்றேனென்று!
டீச்சர் பார்த்துட்டு ஏண்டீ இப்படிலாம் எழுதிருக்கேன்னு ,கேட்டாங்க பாஸ்..எனக்கு பிடிச்சத எழுதினேன்..பிடிச்சா மார்க் போடுங்க..இல்ல விடுங்கன்னு சொல்லிட்டேன் என்றாள்..
பரவாஇல்லை தலைவர் கனவு,பள்ளிபடிப்பிலும் பதிவாகி இருக்கிறது..
தலைவர் எங்கிருந்தாலும்,உலகத்தமிழன் உள்ளங்களில் எல்லாம் உயிராய் உள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி.
ஏற்க்கப்படாத நாட்டிலும்,அவர் தோற்க்கப்பட மாட்டார்...என்பதை சொன்னது இளம் தமிழ்நாட்டு தமிழச்சியின் எக்சாம் பேப்பர் மேட்டர்.
தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதினசரி நீங்கள் கொடுக்கும் ஊக்கம் என் ஆக்கங்களுக்கு ஆர்வமளிக்கிறது நண்பா!.
ReplyDeleteAndha thamizhachiyin thunichaluku paratukal
ReplyDelete