Tuesday, December 15, 2009

வருத்தம் கலந்த என் வரலாற்று பதிவு

(14.12.09 தேதியின் குறிப்பு)

இன்றைய தினம்..கலோக்கியலா சொல்ல்லணும்னா செம மொக்கையான நாள்..
கலைஞர் ஆர்ச்சில்,ஆரம்பித்து காரணீஸ்வரர் கோவிலில் முடிந்த(முடிந்ததாய் தோன்றுகிறது) ஓர் வரலாறு எனக்கு இன்று.
அது முதல் காதலாய்  ஆரம்பித்து பின் முற்றுமாகி..அப்புறம் தொடர்கதையாய் தொடர்ந்திட்ட என் முதல் காதல்இலக்கியம்...
சொல்லும்படி   சுவாரஸ்யமில்லை..ஈகோவில் ஓகோவென வளர்ந்து...பின் கோ கோ என போன கதை..அதற்காய் அவளுக்கு அன்பில்லை என நான் சொல்லவில்லை..அன்பு கூட ஈகோ வாய் இரட்டை வேடமெடுக்கும் அவளிடத்தில்.அந்த ஈகோ என்ற இரண்டாம் நபர் தான் எனக்கு பிடிக்கவில்லை..
எங்கள் பக்கங்களில் சண்டையின்  சரித்திர சான்றுகளே மிக அதிகம்..சண்டை இல்லையேல் நம்முள் சரியான சமநிலை இல்லை என்பாள்...
எனக்காய் பிறந்தநாள் நிகழ்வுகளில் வாங்கி கொடுத்த சில பொருள்களை வேண்டிக்கொண்டு..என் காதல் அறிகின்ற நிலை உனக்கில்லை..உன்னிலை அறிகின்ற நிலை எமக்கில்லை..முற்றும்..என நம் காதலை முடித்துவிடலாம் என்றாள்.ஆம் அதுதான்  சரி என்றேன்.சாதாரண நிகழ்வுகளில் சண்டையிட்ட நாங்கள் சமாதானமாய் எடுத்தமுடிவு.இன்றைய வருத்தம் கலந்த  என் வரலாற்று  பதிவு.

Widget byLabStrike


2 comments:

  1. இயல்பான எழுத்து நடை மொழி ஆளுமை உங்களுக்கு நன்றாக கை கூடி வருகிறது படைப்பாளி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே..உங்கள் வாழ்த்துக்களால் வளர்கிறது எமது எழுத்துக்கள்.

    ReplyDelete