Sunday, December 6, 2009

கடிகார முள்ளும்..எங்கள் காதலும்.

clock

அவளும்,நானும் நொடிமுள்

போல்தான்.

நொடிக்கொருமுறை

-அவள் நினைவில் நானும்,

என் நினைவில் அவளும்

துடிக்கிறோம்.

கடிகாரத்தை பற்றி -நாங்கள்

கதைபேசிய போதெல்லாம்-பெரியமுள்

நானென்று

சொல்லி பெருமைகொள்வேன்.

அப்பொழுதில் அமைதியாய்-அவள்

சொல்வாள்.

நீ பெரிய முள்தான்-பெருந்தன்மை

இல்லாதவன்.

காதல் மீது கண்ணியமற்றவன்.

உன்னை சந்திக்கும் ஒரு

நொடிக்காய்-ஒரு மணிநேரம்

காத்திருக்கும் சிறு முள் நான்.

என்னோடு ஒன்றாய் கலந்திட்டு-காரியம்

முடிந்ததென கழட்டிக்கொண்டு

ஓடும் நீ.. பெரிய முள்

ஆண் வர்க்கம்தான்.

Widget byLabStrike


3 comments:

  1. உண்மையான ஒன்று . ரொம்ப ரொம்ப சூப்பரான கவிதை

    ReplyDelete