Saturday, December 5, 2009

கோலங்கள் சீரியலும்-தமிழ் உணர்வும்.

கொஞ்சநாளாகவே அந்த செய்தி..எங்கள் அலுவலக தேநீர் நேரங்களை தவறாமல் தொற்றிக்கொள்கிறது.

.சீரியல்..கோலங்கள்..திருச்செல்வம்,தொல்காப்பியன்,தோழர்..என்ற வார்த்தைகள் என் காதில் விழுந்து கொண்டே இருக்கின்றன..

எனக்கும் சின்ன திரைக்கும் தொழில் தவிர மற்ற விசயங்களில் தூரம்..அதுவும் சீரியல் என்றால் சொல்லவே வேண்டாம்..தூரமோ..தூரம்.

என்ன வர வர ஆம்பளைங்களும் சீரியல் அடிமை ஆகிடாங்களோ...?சரி என்னதான் மேட்டர்னு நானும் கொஞ்சம் செவி மடுக்க..

செம மேட்டர்..அதுவும் ஷேர் பண்ணவேண்டிய மேட்டர்..

கோலங்கள் சீரியல் கொஞ்ச நாளா அதாவது தலைவர் பிரபாகரன் இறந்ததாக செய்தி சொல்லப்பட்ட காலத்திலிருந்து அதில் ஒரு கதாபாத்திரமாக வரும் தொல்க்காப்பியனும் தலைமறைவாகுவது மாதிரி காட்சி..அவர் எப்போ வருவார் என மக்கள் எதிர்பார்ப்பது போன்று காட்சிகளும்,தோழர் என்றொரு பாத்திரம் தமிழ் உணர்வோடும்,தமிழ் பேச்சில் வல்லமை பெற்ற மனிதராகவும்,தோழர் கொலை செய்யப்படும் போது தமிழ் உணர்வாளன் சாவு..என்கிற மாதிரி ஒரு உணர்வலையையும்...அவர் மேல் மரியாதையான பாத்திரமாகவும்,இந்திய தேசியம் பேசாத சீரியல் எனவும், உணர்வு கொப்பளிக்கும் வசனங்கள் இடம் பெற்றதாகவும் சொன்னார்கள்(பலருக்கு இந்த விஷயங்கள் தெரியாது..எங்கள் மனைவிக்கு நாங்கள் விளக்கினோம்..அப்புறம் அவர்களும் புரிந்துகொண்டதாகவும் சொன்னார்கள்)..

இதுவரை நான் அந்த சீரியல் பார்த்ததில்லை..இருந்தாலும் அந்த தொல்காப்பியன்,தோழர் என்கிற பெயர் ,வார்த்தைகளை கேள்விப்படும் போது உணர்வாளன் தான் என்கிற உண்மை.. திருச்செல்வத்தின் தைரியமும் பிடித்திருந்தது..

அது ஒருவேலை வியாபாரத்திற்காக செய்திருப்பார்களோ..என்ற எண்ணம் ,எனக்கும் தோன்றினால் கூட..பாராட்டாமல் இருக்க முடியவில்லை..எது எப்படியோ உணர்வை சொல்லும் தைரியம் ,திறனுள்ளவன் பாராட்டுக்குரியவனே!

பெண்களின் கண்ணீரை விலையாக்கி வியாபாரம் செய்யும் சீரியல்கள் மத்தியில் ,தமிழ், தமிழுனர்வை முன்னிறுத்தி கொடுத்திருப்பது ஆரோக்கியமானது..

இன்றோடு சீரியல் முடிவடைவதாக சொன்னார்கள்..உணர்வுகளை வெளிக்கொனர்ந்தமைக்கு பாராட்டுக்கள்..

Widget byLabStrike


No comments:

Post a Comment