Monday, November 9, 2009

THIS IS IT - நடன சரித்திரம்!

இன்று சாந்தம் தியோட்டரில் பாப் உலகின் முடிசூடா மன்னன் (king of pop) மைக்கேல் ஜாக்சனின் this is it நடன ஒத்திகை சம்மந்த பட்ட டாகுமெண்டரி படம் பார்த்தேன்.

51 வயது மனிதரா இவர்..என்கிற ஆச்சர்யம் இல்லாமல் இல்லை..என்ன வேகம்..எவ்வளவு விறுவிறுப்பு..ஆல்பம்களில் பார்த்த அதே  இளம் வயது
ஜாக்சன்...

ஆட்டம்..பாட்டம்..கொண்டாட்டம்..நமக்கெல்லாம்.

அவர் மற்றவர்களிடம் வேலை வாங்குகிற தோனி எளிமையை காட்டுகிறது..உன்னால் முடியும் என எல்லோரையும் அவர் ஊக்குவிக்கிற முறை அவர் கிங் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது..

பிரமாண்டமான செட்...அழகான லைட்ஸ்...வேலைகள்...எல்லாம் ஒரு மனிதனின் பின்புல பெருமையை வெளிப்படுத்துகின்றன..

அந்த மனிதனின் ஆச்சர்யம் மூட்டும் நடன அசைவுகளில் மூழ்கி திரையரங்கமே..படம் முடிந்து..எழுத்து காட்சிகள் வந்தபின்னும் எழ மறுக்கிறது..

love lives forever என போட்டு படத்தை முடிக்கிறார்கள்..உண்மைதான்..அவர் இறந்தாலும் வாழ்வார்,வாழ்ந்துகொண்டே இருப்பார் ..என்பதை அவர் அசைவுகள் நம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்கின்றன..

this-is-it-நடன சரித்திரம் சாயவில்லை...சகாப்தமாய் நிமிர்ந்து நிற்கிறது..

 



Widget byLabStrike


No comments:

Post a Comment