Thursday, November 26, 2009

தலைவா உன்னாலே தலைநிமிர்ந்தோம் !



கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி..

என்றாரே தமிழை.

யார் சொன்னது?

தலைவா!நீ பிறந்ததால்..தமிழின் அகவை

எனக்குத் தெரிந்தது.

55 ஆண்டுகள்தானே அதற்கு ஆகிறது.

அடிமை தமிழனை மீட்டெடுக்க

அவனுக்கோர் நாட்டினை தாம்படைக்க

சிங்கள அரக்கனை சிதறடிக்க

புலியாய் புறப்பட்டு வந்தவனே!

அறமொடு போரை புரிந்தவனே!

அழியாப் புகழை உடையவனே!

உம பிறந்த நாளாம் இன்று..

நாளை மலரும் தமிழீழம் சொல்லும்..உன்னாலே

தலைநிமிர்ந்தோம் என்று!

Widget byLabStrike


No comments:

Post a Comment