Saturday, November 21, 2009

தமிழ்நாட்டின் தன்மான முத்தே!


முத்துக்குமரா!!

தமிழ்நாட்டின் தன்மான முத்தே!

தமிழனுக்காய் தன்னுடல் தாரைவார்த்த

தமிழமுதே!

நீ உன் உடலினில் ஏற்றிய தீயினில் தானடா

தூங்கி கிடந்த தமிழ்நாட்டு தமிழன்

கொஞ்சம் பேராவது துயில் களைந்தான்.

புரட்சி தீபமே!

எத்தனை கட்சிகள் போடுகின்றன

தீர்மானங்கள்..உன் துண்டறிக்கை

முன்னாலே தூசாயின அவையெல்லாம்.

அறிவொளியே!!

இவ்வுலகம் உள்ளவரை

தன்மான தமிழே!

முத்தமிழும் முழக்கமிடும் உன் பெயரை.

முத்துகுமரா நின் புகழ் வாழ்க!!!


Widget byLabStrike


No comments:

Post a Comment