Thursday, November 19, 2009

எப்படி மறக்கும் உனக்கும் எனக்குமான உறவு?



இரு இதயங்கள் இடமாறி ஒன்றானதே!

ஒரு மூச்சினில் இருவர் சுவாசித்தோமே!

என் உணர்வுகளை உன்னில் சுமந்தாயே!

பெண்மையின் முதல் ஸ்பரிசம் -என் ஆண்மை

அனுபவித்ததே!

நான் பேசி முடித்த போதெல்லாம் -நான்

யோசித்தேன்-நீ பேசினாய் என்றாயே!

பேருந்தில் உன்னை வழியனுப்பிய போதெல்லாம்..

பேருந்து மறைந்தும்-உன் பார்வை எனைத்

தொடர்ந்ததே!

உன் அருகில் அமரும் ஒரு நிமிடத்திற்காய் -ஒரு மணிநேரம்

தவமிருந்தேனே!

உன்னை ஏமாற்றுவதாய் எண்ணி-ஏமாந்திருக்கிறேன்

உன்னிடத்தில் எத்தனைமுறை.

நீ என்ன எண்ணுகிறாய் என்பதை-உனக்கு

முன் நானறிவேன் என்பாயே!

ஆண் என்றால் அழக்கூடாது-என்றிருந்தவனையும்

அழ வைத்த உனது அன்பு..

என் இறுமாப்பு உடைத்த இதயமே!

உன் திருமணத்துக்கு பின்னாலான-நம் சந்திப்பில்

காதல் வற்றாத உன் கண்களை -கண்ணீரோடு

பார்த்தேனே!!

உன் கடைக்கண் கண்ணீரில் என்னை நனைத்தாயே!

கல்யாணம் ஆனது உனக்கு..

காதல் மறந்து போகுமென -எனக்கு

சொன்னார்கள்..

எப்படி மறக்கும்

உனக்கும்- எனக்குமான

காதல்.

Widget byLabStrike


1 comment:

  1. manathil pattadhai maraikkaamal sollum ivarudaiya thozhiyai irupadhil perumidham kolgirean............................

    ReplyDelete