Thursday, November 5, 2009

கூரைக்குள் மழை.

koorai

கடலுக்குள் தான்,கப்பல் விடவேண்டுமென்று

அவசியமில்லை-இது ஏழை வீடு..

மழைக்காலத்தில் வாருங்கள்..

வீட்டிற்குள்ளேயே விடலாம் கப்பல்.

மழைக்கு ஒதுங்க

இடம் தேடுகிறார்கள்..

மழைக்கென்ன ஆசை-ஒதுங்க இடம் தேடி

என் வீட்டிற்குள்.

மழை நீர் சேகரிப்பை ஒழுங்காய்

-செய்வதில்லை யாரும்.

யார் சொல்லி கொடுத்தார்கள்-என்

வீட்டு கூரைகளுக்கு மட்டும்.

Widget byLabStrike


No comments:

Post a Comment