Wednesday, November 4, 2009

மொக்கை பெண்ணே!!சொக்க வைக்கிறாய் கண்ணே!!

black

என் அருமை கருவாச்சியே!

கவலைபடாதே..கவிழ்த்து விட்டான் காதலன் என்று..

கூவுவதில் குயிலடி நீ.

மான்விழி எனமாட்டேன்..

மீன்விழி எனமாட்டேன்...

ஆந்தை விழியானாலும் அழகு விழி உனக்கு..

ஆறடி கூந்தலில்லை-ஆனாலும்

உன்னால் மட்டும் எப்படி முடிந்தது..

இரண்டடியை இவ்வளவு அழகாய் காக்க.

நின்னல் இடையில்லை

எனக்காய் பெருத்திருக்கிறாய்.

என்கைப்பிடியில்-உன் இடுப்பெலும்பு இம்சை தரக்கூடாதென்று..

கருங்கூந்தலுக்கிடையில்-எத்தனை

வெள்ளிமுடிகள்..

எவ்வளவு விலை கொடுத்தாய்..

இதழ் முத்தம் பதிக்கும் போது

என்னில் பதியவா?

நீளமாய் வளர்த்தாய்,கோரைப் பற்களை.

என்னை நினைத்தே-எப்போதும்

காண்கிறாயோ..கனவு.

சொல்கிறது உன் தூங்கி வழிந்த முகம்.

காதலில் முதிர்ந்தாயோ!!

நடையில் தெரிகிறது அழகு..

தளர்ந்து போன கிழவி நடை..

மொத்தத்தில்..

மொக்கை பெண்ணாயினும் சொக்க வைக்கிறாய் என்னை..

Widget byLabStrike


2 comments:

  1. Romba than irukara korayellam solitu sokka vaikum sundari ya nalla iruku

    ReplyDelete
  2. sadharana onrai alakakuvathu than kavithai good nalla irukku alakana figurku mattumalla asigamana girlkum kavithai eluthalamnu nirupichirukinga

    ReplyDelete