Tuesday, November 3, 2009

அவள் பெயர் தமிழரசி-இசை வெளியீடு-ஒரு டைரி குறிப்பு

apt

முன்னெல்லாம் டைரி குறிப்பு என்பது,நினைவுகளை அசை போட,அன்றைய நாளின் வேலை,சொந்த கதை,சுவாரசியம் என நினைவுகளை நீட்டித்து பார்க்க தேவைப்பட்டது ..அப்போ எழுதுபவர்களும் அதிகம்..டைரி குறிப்பு எழுதுவதை வாழ்கையின் ஒரு அங்கமாக தன் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்த பெற்றோர்களையும் நாம் அறிவோம்..

ஆனால்..டைரி குறிப்பு என்பதெல்லாம் இன்றைய கணினி வாழ்க்கையில் காணாமல் போயிற்று..அதற்காக நாம் வருத்தப்பட்டாலும் அதை கடந்து இன்று கணினி ஆதிக்கம் அதிகமானதால்..கணினி குறிப்பாய் தினந்தோர வாழ்கையை நாம் நினைவில் கொள்ளாவிடினும்,சில முக்கிய நிகழ்வுகளை குறிப்பது..நிதானமான நேரத்தில் நினைத்து அசைபோட சுகமாய் இருக்கும்..

அப்படிதான் இன்றைய நாள் எனக்கு..கணினி குறிப்பாய்..

இன்று..அவள் பெயர் தமிழரசி..இசை வெளியீடு..சாந்தம் திரையரங்கில்..அதன் நிமித்தம் என் நண்பர் என்னை அழைத்திருந்தார் போயிருந்தேன்..

திரையுலகின் இன்றைய இளம் ஜாம்பவான்கள் அமீர்,சசி முதல்..மூத்ததலைமுறை பாலு மகேந்திரா,மகேந்திரன்

சன் பிச்சர்ஸ் சச்சேனா..அபிராமி ராமநாதன்..நடிகர்கள் பரத்,பார்த்திபன் வரை அனைவரும் அயிக்கியம்..

பேசியவர்கள் அனைவரும் அழகாய் பேசினார்கள்..கடைசியாய் படத்தின் இயக்குனர் மீரா கதிரவன் பேசுகையில் தாயின் பிரசவத்திற்கு பின் மீண்டும் பிரசவம் ஆனா மாதிரி மகிழ்ச்சி இருக்கு என்றார்..அழகான வார்த்தை..உண்மைதான் அவருக்கு முதல் படம்..

அதனாலே இன்றைய கணினி குறிப்பாய் இதை எழுத விழைகிறேன்..

அவன் பெயர் மூர்த்தி..

வயது 28..கலை இயக்குனர்..

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் என் பயணங்களில்...என் எண்ணங்களில் என்னோடே பயணப்பட்ட என் நண்பன்.

உண்டு உறங்கி ,ஒரே தட்டில் சாப்பிட்டு,பட்டினியில் பாதி காலம்,தண்ணீர் மட்டும் குடித்து தள்ளிய மீதி காலம்..கல்லூரி-விடுதி காலம் முதல் சிநேகிதன்..

பின் அனிமேசனில் எங்களோடு அடிபட்டு..இன்று விடுப்பட்டு ஆர்ட் டைரக்டர் ஆகியிருக்கும் அருமை நண்பன்.

கல்லூரி காலத்து ஆய்வறிக்கையில்,எங்கள் இருவரின் ஆய்வறிக்கை மட்டும் நாங்கள் கடந்த வாழ்க்கையை தொடர்ந்திருக்கும்..

தமிழ் உணர்வாளன்..தனம்பிக்கையாளன்..தொழிலை காதலிப்பவன் என்பதை விட சுவாசிப்பவன் என்று சொல்லலாம்..

ஓவியக்கல்லூரி காலம் முதல் இருவருக்குமே திரை மீது ஒரு தீராத காதல் உண்டு...

தற்போது திரைக்கு அப்பாலான துறையில் நான்..திரைத்துறையில் என் நண்பன்..

பாடல் காட்சிகள் திரையில் மின்ன..என் நண்பனின் முகத்தை பார்த்தேன்..திரையை விட அவன் முகம் ஒளிர்ந்தது..அவன் கண்ணில் வழிந்த இரண்டு சொட்டு கண்ணீர் ஆனந்தம் செறிந்தது..

எதற்காய் காத்திருந்தேனோ..அந்த நாள் இன்னைக்குதான் மச்சி என்றான்..அதற்க்கு மேல் வார்த்தை வரவில்லை..

இனி எத்தனை படம் அவன் இயக்கினாலும் முதல் படைப்பு என்கின்றபோது..அதில் அடையும் அலாதி தனிதானே!!என் நண்பனின் மகிழ்ச்சி என்னுள்ளும் பரவியது..

படத்தின் இயக்குனர் மீரா கதிரவன் சொன்னாரே ...பிரசவத்திற்கு பின் ..மீண்டும் பிரசவம் ஆகிற மாதிரி மகிழ்ச்சி..என் நண்பனுக்கும்தான்.இவனுக்கும் முதல் படம்.

மறக்கமுடியாத ஒரு தினமாக அமைந்தது இன்று.

Widget byLabStrike


1 comment:

  1. nice words to shows your friendship and also metion the felling of all gaints who were all being there. Nice concepts

    ReplyDelete