Friday, October 2, 2009

காதலி காவியம்...

letter1

காதலித்த போது அவளிடம்
-கவிதை கேட்டேன்...

உன்னை போல்..எனக்கு,கவிதை எழுத தெரியாது.
தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.
இருந்தாலும் உனக்காக .. ஓர் ஒற்றைச்சொல் கவிதை
உன் பெயர் என்றாள்.

இடைமறித்து சொன்னேன்...
அது என் அப்பன் அருளியதென்று....

காத்திரு கண்ணா...
-என காதலி சொன்னாள்.
உனை கைப்பிடிக்கும் காலம் வரும்...
அப்போ -என் பெயரும் உன் பெயரும்
உறவாடி ஒன்று சேரும்....

அன்றோ ...
என் பெயர் கவிதையல்ல...
காவியம் என்றாள்.

Widget byLabStrike


1 comment:

  1. இன்னும் காத்து கொண்டு தான் இருகிறீர்களா கண்ணா??????

    ReplyDelete