
சிலர் உன்னை பாப் பாடகர்
-என்கிறார்கள்..
இல்லை..அவர்
-ஆங்கிலநாயகன் எனும் பலர்.
தாடியை பார்த்து
-வில்லன் நடிகரோ !!
உனது புகைக்கும் இதழ் பார்த்து
-தாதாவோ என்பவரும் உண்டு.
அறிந்தவர் கேட்கின்றார்..
யாரென்றே தெரியாமல் அணிந்திருக்கிறாயா? என்று!!
அழகாய் இருந்தது-அணிந்தேன்
என்கிறது பதில்.
இப்படிதான் பலரின் பனியன்களில்,
- புரட்சியாய்..
புரட்சி வென்றதை புரியவைக்கிறாய் நீ!!
சே வின் வாழ்க்கை பின்னணியில் வெளியான The Motor cycle diaries திரைப்படம் பார்தீர்களா..???
ReplyDeleteஆம் பார்த்திருக்கிறேன்..நல்ல படம நண்பரே..
ReplyDeleteமிக நன்று.. யாரென்றே தெரியாமல் சே-வின் படங்களை அணிந்திருப்பவர்களைக் கண்டால் சிரிப்பதா, கோபப்படுவதா என்று தெரியல.
ReplyDeleteஆமாம் நண்பரே..உணர்வுள்ளவர்களுக்கு கோபம் வரும்..வரவேண்டும்தான்..ஆனால் அறியாதவர்களுக்கு அறியவைக்கலாம் நண்பா..
ReplyDelete