Friday, October 30, 2009

பேராண்மை..படம் அல்ல பாடம்.

peranmai_01

ஜனநாதன் வெகுஜனங்களின் நாதன் என மீண்டும் ஒருமுறை தன்னை மெயப்பித்திருக்கிற புதுமை பெண்களின் வீரம் சொல்லும் ஆண்மைத்தனமான திரைப்படம்.

ஆரம்ப காட்சியிலேயே ராக்கெட் ஏவ காரணம் சொல்லும் போதும் ராக்கெட்டிர்க்கு பசுமை என பெயரிட்ட போதும் இயற்கை வேளாண்மை உலகளாவிய எதிர்கால சிந்தனை தெரிகிறது.

அந்த காட்சியிலேயே தமிழனின் பெருமையையும் தமிழர்களின் பங்களிப்பே அந்த ராக்கெட் ஏவ காரணம் எனவும் ,அந்த வசனத்தை ஏதோ ஓர் வெள்ளைகாரனையோ,வட இந்தியனாகவோ காட்டி ஆங்கிலத்தில் பேசவைத்து சப் டைட்டில் போட்டு விஞ்ஞானி என்றாலே ஆங்கிலம் தான் பேசவேண்டும் என்கிற மணிரத்னம், ஷங்கர் பில்டப் இல்லாமல்..தமிழ் புகழ் சொல்லி இருப்பது நலம்.உணர்வு தெரிகிறது.

நல்ல கதைக்களம்.ஜெயம் ரவியை உயரதிகாரி மற்றோர்க்கு அறிமுக படுத்தும் காட்சியில் மலைவாழ் இனத்திலிருந்து வந்தவர்..எனக்கூறி பெருமை பேசுவது போல் சிறுமை பேசுவது..அவரின் கேவலமான சிந்தனை,சமுதாய நிலைப்பாட்டை தோலுரிக்கிறது ..

ஜெயம் ரவிக்கு கீழ் பயிற்சிக்கு வரும் பெண்கள் மலைவாழ் இனத்தவன் கொடுக்கிற பயிற்சி அவமானம் என எண்ணி "இந்தியாவின் பெருமை எனக்கு தெரியும்..அவன் ஜாதி என்ன??நம் ஜாதி என்ன?என்கிறபோது மானமுள்ள இந்தியாவின் மானமும்,வளரும் இந்தியாவின் வளர்ச்சியும் நன்கு புரிகிறது.

பல இன்றைய சமுதாய அவலங்களை சொல்கிற வசனங்கள் கட் செய்யப்பட்டு வாயசைப்பு மட்டுமே நம்மை வந்தடைகிறது.அப்படி இருந்தும் சில இடங்களில் ஸீன் புரிகிறது.

பொன்வண்ணன் இவன் நம்மை பார்த்தால் தோளில் போடும் துண்டை இடுப்பிலே செருகுபவன்,வணக்கம் போடும் சாதி என கூறுவதை உணர முடிகிறது.

அக்காட்சி வள்ரும் எனக்கூறிக்கொள்ளும் இந்தியாவின் நிலைப்பாடு இதுதான் என்பதை எடுத்து இயம்புகிறது...அதை எடுத்து சொல்லும் போது சென்சார் அதிகாரிகளுக்கு தாங்கி கொள்ள முடியவில்லை..

ஏன்?சமுதாயத்தில் உள்ள கேவலமான ஜாதி வெறி பிடித்த மனிதர்களை துகில்லுரித்தால் சென்சார் பண்ணுவீர்களா??இது போன்ற அவலங்கள் இங்கு இல்லாததுபோல் அரசியல் பண்ணுகிறீர்கள். இதே மாதிரி வசனங்கள் தசாவதாரத்தில் கமல் தலித் வேடத்தில் நடித்த போது,சந்தான பாரதி பேசுவாரே..அது ஏன் கட் செய்ய்ய படவில்லை..பார்பன சமூகம் படம் பண்ணியதாலா??இல்லை பெரிய நடிகர் சாதியை பற்றி பேச அனுமதியா???இல்லை கட்டிங் வாங்கினீர்களா? சென்சார் அதிகாரிகளே..

மேலும் இளமை துள்ளும் பெண்கள் அதுவும் ரகளை கிளப்பும் பெண்கள் ஒன்று சேர்ந்தால் என்ன அராஜகம் செய்வார்களோ..எப்படி பேசுவார்களோ..இரட்டை அர்த்த வசனங்களாய் அது கட் செய்யப்பட்டிருக்கிறது. அப்போ சந்திர முகியில் ரஜினி ஆவி பிடிக்கலாம்,அசத்தலாம்,அமுக்கலாம். அது சென்சாரின் கண்களுக்கு தெரியவில்லை..ரஜினி சமுதாய வளர்ச்சிக்காய் வசனம் பேசினார் போலும்..அதோடு ஒப்பிடும் போது இதில் ஒன்றும் அதை மிஞ்சிய இரட்டை அர்த்த வசனமில்லை..

விடுங்கள் படத்தை விமர்சனம் செய்ய போய் வேறு பாதை பயணமாகிவிட்டது..படத்திற்கு வருவோம்.

ஜெயம் ரவி கொடுக்கும் பயிற்சி நம்மையும் பயிற்சி வகுப்புக்கு அழைக்கிறது..கம்பீரமான ,ஆண்மைத்தனமான ரவி தெரிகிறார்.

பொன்வன்னனால ரவி நடத்தப்படுகிற அணுகுமுறைகள் சாதியை வெறியை,மேல்சாதி அடக்குமுறையை அம்பலப்படுத்துகிறது. பொன்வன்ணனை, அந்த பெண்கள் ரவியை பற்றி குறை சொல்ல சந்திக்கும் போதெல்லாம்..சரியாக அவர் அறையில் 5 சேர்கள் போடப்பட்டிருப்பது சினிமாத்தனம்..(ஒன்றிரண்டு குறைத்தோ,சேர்த்தோ போட்டிருக்கலாம்)

பயிற்சி ஒழுங்காக பெறாத பெண்கள் என அந்த கதாநாயகிகளை ரவி காட்டிற்கு அழைத்துசெல்ல
செலக்ட் பண்ணும் போது..டைரக்டர் சொல்லும் காரணம் அருமை.

முதலில் ரவி மணி ,கமோடிட்டி பற்றி வகுப்பு எடுக்கும்போதும் பிற இடங்களிலும் கம்யூனிச சிந்தனைகளும்,காட்டில் புலிபாதம்,கரடி சுவடு,யானை சாணம்,வவ்வால் என பாடம் எடுக்கும் போது வனவியல் அறிவு நமக்கும் வந்தடைகிறது..

ரவி யோடு வந்த பெண் வெள்ளைகாரர்களை பார்த்ததாக கூறிய பின்...அவர்கள் எந்த நாட்டு காரர்கள்?எதற்கு வந்திருக்கிறார்கள் என பெண்கள் கேட்கும் போது..அவர்கள் எந்த நாட்டிற்கும் சம்மந்த பட்டவர்கள் இல்லை..கூலிப்படைகள்..இந்த ராக்கெட் ஏவுவததால் பாதிப்படையும் பணக்காரர்களின் கைக்கூலி எனும் போது புது அர்த்தம் புரிகிறது.

இன்றைய இந்திய சினிமாவில் இந்தியாவின் எதிரி என்றால் பாகிஸ்தானை காட்டுவார்கள்,ஒருவேளை இனி வருபவர்கள் சீனாவை காட்டக்கூடும்..அப்படி அரைத்த மாவை அரைக்காமல் புது காரணம் சொல்லி இருபதற்கு இன்னொரு முறை பெருமைப்படலாம்.

வடிவேலுவை காமெடி காக மட்டுமில்லாமல்..கருத்துக்காகவும் பயன்படுத்தி இருப்பது நலம்..செருப்பு தைப்பவன் புள்ளை செருப்புதான் தைக்கணுமா ??மாடு மேய்பவன் மாடு தான் மேயக்கனுமா??என்கிற போதும் சரி...இனி உங்க கிட்ட விளையுரத உங்க புள்ளைங்களுக்கு கொடுங்க..ஊருக்கு கொடுக்காதீங்க..என்கிற போதெல்லாம் அருமையான வசனங்கள்..

ஜெயம் ரவி அந்த பெண்களை வீரமூட்டுகிற காட்சியில்..தமிழர்களின் வீரத்தை இன்னைக்கு உலகமே பார்த்திருக்கு எனும் போது..உணர்வு கொப்பளிக்கிறது. பெண்கள் சண்டையிடும் போது பென்புலிகளாகத்தான் நமக்கு தெரிகிறார்கள்..ஆயுதங்களும்,அதனை பற்றிய அறிவு போதித்தலும் அலாதி..அப்பெண்கள் படித்தவர்கள்,பயிற்சி பெற்றவர்கள் என்றாலும் உடனே உள்வாங்கி கொள்கிறார்கள் என்பதுதான் ஏற்கமுடியவில்லை.. சிறு குறைகள் பெரிய விசயமில்லை..

சேதி சொல்ல செல்லும் பெண் இறக்க நேரிடும் போது திரை மட்டுமல்ல...திரையரங்கமே அமைதி கொள்கிறது.

நீதான் காளி,நீதான் அம்மன்,நீதான் துர்க்கை என்று ரவி பேசும் வசனம் ஆத்திகமாக தோன்றவில்லை..வெறியை உண்டு பண்ண என்பது தெரிகிறது..அந்த பெண்கள் முடிவிரி கோலமாய் ஓடுவது உறுத்தல் தான்..மாடர்ன் டிரஸ் ல உலா வந்தவர்களா இப்படி??
அந்த பாடலின் வேகம் கூட்ட,காட்சி அமைப்பிற்கு என்பதும் புரிகிறது..

கடைசிவரை ரவி அடங்கி போகிறவராக காட்ட வேண்டிய அவசியம் இல்லை..அவ்வளவு கோபம் கொண்ட அந்நிய சதியையே அழிக்க துடிப்பவன்.. இளைஞன்..உள்நாட்டு தன் மேலதிகாரியின் பிற்போக்கு சிந்தனையை,சமுதாய பின்னடைவை ,சாதி வெறியை கண்டுகொள்ளாமல் ,அடங்கிபோகவேண்டிய அவசியம் இல்லை..அது நம் மனதை உறுத்துகிறது...

இருந்தாலும் படித்து வளர்ந்த நிலையில் உள்ள ரவியை பழங்குடி என்பதால்..வளர்ச்சியை தடுத்து,அவன் திறமையை மட்டப்படுத்த பார்க்கிறார்கள் என்பதை ஜனநாதன் சரியாக சொல்லி இருக்கிறார்..

பரபரப்பான சண்டைகள்..மயிர்கூச்செறியும் காட்சிகள்..கொரில்லா தாக்குதல் என ஆங்கில படத்தின் தரம்..சாராம்சம்.

இந்தியநாட்டை காப்போம் ..என்கிற போதெல்லாம் நம் தாய் தமிழனை கொன்ற நாட்டை அப்படி சொல்வது வெட்க கேடாகதான் தோன்றுகிறது..இலங்கை நிகழ்வுகளுக்கு பின்.

.என்ன செய்ய?? சாதாரண வசனங்களுக்கே கத்தரி போட்ட சென்சார்...தமிழ்நாடு,தமிழ் என்றால் தாங்கி இருப்பார்களா??முழு படத்தை மூட்டை கட்டி முழுக்கு போட்டிருப்பார்கள்..

படத்தின் கிளைமாக்ஸ்... ஜெயம் ரவி வெல்லும் வெள்ளையர்கள்,எவுகனை யுத்தம் பொன்வண்ணன் தலைமை வென்றதாக கூறி பொன்வண்ணன் பதக்கம் பெறுவது இந்தியாவின் இன்றைய நிலை...உயிரை கொடுத்தாவது என் தேசத்தை காப்போம் என ஜெயம் ரவி மீண்டும் பேசும் வசனம்..காப்பவர்கள் காத்து கொண்டிருக்க வேண்டியதுதான்..பதக்கமும்,பதவியும் சேர வேண்டிய இடத்தில் சேரும் என்கிற உண்மையை உணர்த்துகிறது..

ஜனநாதன்,,இந்தியா என்று முலாம் பூசி(சென்சாருக்காக )..தமிழனின்,வீரத்தையும்,தமிழனின் புகழையும்,எங்கெல்லாம் சொல்ல முடியுமோ..அங்கெல்லாம் அழுத்தமாக சொல்லி,சாதி வெறியை துகிலுரிக்கிற சமுதாய அக்கறையுள்ள படம் செய்திருக்கிறார்... தமிழ் சினிமாவில்...இது படம் அல்ல...பாடம்.
Widget byLabStrike


No comments:

Post a Comment