Thursday, October 29, 2009

அவள் அனுப்பிய முதல் கடிதம்!

post card



எனக்கும்..அவளுக்குமாய்..

நட்பு நடைகட்டி,காதல் களைகட்டிய

கவின் காலம்.

காதலென்றால் கவிதை வரும்.

அது கடிதமாகும்..

பின் இடமாறும்..இன்பம் சேரும்.

பாவம்..இவனோ கலியுகத்து

காதலனானான்.

அலைபேசி பிசாசு அலைக்கழித்தது...

கடிதமில்லை..கற்பனை இல்லை..

சாட்டிங்..மீட்டிங்..டேட்டிங்..

கவிதை இப்போ மிகசுருங்கிய ஹைக்கூ வானது.

இருபது ஆண்டு முன்னிருந்தால்..

இறுமாப்பாய் சுற்றி இருப்பேன்

காதலி கடிதம் பார்த்து..காதல் கடிதம் படித்து..

காலம் கடந்து பிறந்து

கவிதை காதல் மறைந்து

கற்பனை வற்றிய காலத்து காதலன் ஆனேனோ..

வாழ்த்து அட்டை வாங்கி கூட

வழக்கப்படாதவள் போலும்..

பொங்கல், தீபாவளி கூட வந்ததில்லை வாழ்த்து அட்டை.

ஏங்கி தவித்த..எத்தனை நாட்கள்

வாங்கி குவித்தன.

அலைபேசி அழைப்பை மட்டும்.

அப்படியான காலத்தில்தான்..

அது வந்து சேர்ந்தது

நான் பள்ளிப்படிப்பில் பழகினேனே !15 பைசா தபால் அட்டை.

பார்த்ததுபோல் இருகிறதா?

இப்பொழுது தெரியுமா இது என்ன விலை என்று?

கடந்த கால காதல்களின் கடத்தி இதுதான்.

ஓராண்டு காதலிக்கிறோம்..

ஒரு நாலாவது அனுப்பினாயா?காதல் கடிதம்

கலியுக காதலனே!!

தபால் அலுவலகம் போ..

அஞ்சல் அட்டையை தரிசி..

கடிதம் எழுது..காதல் செய்..கவிதை வாழ உயிர்பிச்சை போடு..

இவளுக்கா.. கற்பனை இல்லை..

தமிழ் திலகமிட்டவளையா தீண்டி பார்க்கிறாய்..

ஏமாற்றம் அடைந்தாயோ என்னவனே!

-என்றது

அவள் அனுப்பிய முதல் கடிதமும்.

காதல் அட்டையும்..



Widget byLabStrike


1 comment: