Friday, October 2, 2009

... இப்படியாய் ஈழத்தமிழினம்

அருந்த தேகங்களுக்கு
-மருந்தில்லை...

இயல்பாய் பிறந்தவன்
இயலாதவனாய் - கை காலிழந்து...

நேற்று வரை உலகை ரசித்தவன்
- இன்று இருட்டு கண்களுடன்...

ஒவ்வொரு நாளும்
-ஒவ்வோர் விலாசங்கள்...

அப்போதெல்லாம் ரசித்து புசித்தவன்
-இப்போ புசிக்கிறான் பசியை ...

தந்தை ஓரிடம், தாய் ஓரிடம்
-குழந்தை ஓர் முகாமில்...

இப்போவரை இருக்கிறோம்
-அடுத்த நொடி என்னாகும்?

இப்படியாய் ஈழத்தமிழினம்
-பிணந்தின்னிகளாய் சர்வதேசம்...

Widget byLabStrike


3 comments: